Pongal 2024: முதல் முறையாக சொந்த வீட்டில் பொங்கல் விழா; மகிழ்ச்சியாக குத்தாட்டம் போட்ட பழங்குடியினர்
" முதல் முறையாக பொங்கல் கொண்டாடியதால் பழங்குடியினர் மகிழ்ச்சி "
முதல் முதலில் சொந்த வீடுகளில் மகிழ்ச்சியாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய பழங்குடியின மக்கள். பொங்கல் விழாவிற்காக பழங்குடியினர் வீட்டிற்க்கு வீடு வீடாக சென்று புத்தாடை வழங்கியும், கயிறு இழுத்தல் போட்டி நடத்தியும், அறுசுவை உணவு அள்ளிதனர். மேலும் பெண் ஒன்றிய குழு பெருந்தலைவர் மற்றும் பெண் ஊராட்சி மன்ற தலைவர் இரு குழுக்களாக பிரிந்து கயிறு இருக்கும் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர்
தமிழ்நாடு அரசு புதியதாக வீடு
காஞ்சிபுரம் அடுத்த குண்டு குளம் பகுதியில் சுற்று வட்டார பகுதியில் ஏரி மற்றும் குளம் கரையோரம் வீடுகள் இன்றி இன்குடிசை வீட்டில் வசித்து வந்த பழங்குடி இன மக்களுக்காக 58 குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு புதியதாக வீடு கட்டி கடந்த மாதம் திறப்பு விழா தெரிந்து அனைத்து பழங்குடி மக்களும் குடியேறினர்.
இன்று முதல் முறையாக
இந்த நிலையில் வாழ்நாள் முழுவதும் பொங்கல் விழா என்று காணாமல் தனிப்பட்டு இருந்த பழங்குடியின மக்கள் சொந்த வீட்டில் இன்று முதல் முறையாக குடும்பத்துடன் ஒன்றிணைந்து பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர்.
புத்தாடை வழங்கி பொங்கல் விழா
விப்பேடு ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி அருள்நாதன் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர் கொடி குமார் புதிதாக குடியேறி உள்ள 58 பழங்குடிய இன மக்களுக்கு வீடு வீடாக சென்று புத்தாடை வழங்கி பொங்கல் விழா கொண்டாடினர்.
கயிறு இழுக்கும் போட்டி
மேலும் பழங்குடி இன மக்களுக்கு உற்சாகப்படுத்தும் வகையில் கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்க்கொடி குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி அருள்நாதன் இரு குழுக்களாக பிரிந்து கயிறு இழுக்கும் போட்டியில் கலந்துகொண்டு பழங்குடி மக்களுக்கு உற்சாகப்படுத்துங்கள். மேலும் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டு பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.