மேலும் அறிய

நாம் மறந்த பாரம்பரியம்.. கண்டாங்கி முதல் காஞ்சிபுரம் சேலை வரை... ஓர் முழு பார்வை

National Handloom Day: தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் தயாராகும் முக்கிய கைத்தறி ரகங்கள் குறித்து காணலாம்

ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்தியாவில் தேசிய கைத்தறி தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் இந்தியாவின் நெசவு பாரம்பரியத்தையும், அதனை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுகிறது.  அந்த வகையில் இந்தச் செய்தி தொகுப்பில் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த கைத்தறி ரகங்களை குறித்து நாம் பார்க்கலாம்.

கண்டாங்கி சேலை

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு பல நாடுகளுக்கு விற்பனையான சேலைகளில் ஒன்று கண்டாங்கி சேலை. கண்டாங்கி சேலைகள் இரண்டு ஓரம் கொண்டதாகவும், நடுவில் கட்டம் போட்டதாகவும் இருக்கும். காரைக்குடியில் மட்டுமே புகழ் வாய்ந்த இந்தச் சேலைகள், நகரத்தார் மூலம், பல நாடுகளில் பிரபலமானது. 48 அங்குலம் அகலம், 5.5 மீட்டர் நீளம் கொண்டது இந்த சேலை, பாரம்பரிய பெருமையை பறைசாற்றி வருகிறது.

இந்த சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இந்த சேலை புழக்கத்தில் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். காரைக்குடியை சேர்ந்த நெசவாளர்கள் ஆண்டு காலமாக கைத்தறியாகக் கண்டாங்கிச் சேலையை நெசவு செய்து வருகின்றனர். 

கூரைநாட்டு புடவைகள் 

தமிழ்நாட்டில் இந்து முறைப்படி நடைபெறும் திருமணங்களில் கூரை புடவைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. பெரும்பாலான குடும்பங்களில் திருமணம் ஆகும் பெண்கள் திருமணம் நாளன்று இந்த புடவை அணிவது வழக்கமாக உள்ளது. எண்பது சதவீதம் பட்டு மற்றும் இருபது சதவீதம் பருத்தி கலந்து தயாராகும் இந்த கைத்தறி புடவைகள் மயிலாடுதுறை மாவட்டம் கூரைநாடு என்ற பகுதியில் தயாரிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் பட்டு சேலை

பல நூற்றாண்டு காலமாக பழமை வாய்ந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள் முக்கிய இடத்தை பெறுகின்றன. உலகம் முழுவதும் காஞ்சிபுரத்தில் தயாராகும் ஜரிகை வைத்த பட்டு சேலைகள் புகழ் பெற்றதாக விளங்குகிறது. காஞ்சிபுரத்தில் கைத்தறியில் தயாராகும் இந்த பட்டுப் புடவைகள், பல லட்ச ரூபாய் சந்த மதிப்பை கொண்டுள்ளதாக உள்ளது. ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வர்த்தகம் காஞ்சிபுரம் பட்டு சேலையில் நடைபெறுகிறது.

காஞ்சி பட்டுப்புடவை எடை சற்று அதிகம்  (ஜரிகைக்கு ஏற்ப எடை அளவு அதிகரிக்கும், ஆனால் குறைவாக இருக்காது). அதில் 100 கிராம் பாடர் உள்ள ஜரிகையில் 40 கிராம் வெள்ளி, 0.2 சதவீதம் தங்கம் கலந்திருக்கும். 72 வகையான தொழில்நுட்பங்கள் காஞ்சிபுரம் பட்டுபுடவை தயாரிக்கும் போது பயன்படுத்தப்படுவதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர். 

ஜமுக்காளம்

ஈரோடு மாவட்டம் பவானியில் தயாரிக்கப்படும் ஜமுக்காளம் தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்றது. ஒரு காலத்தில் ஜமுக்காளம் போர்வையாகவும், தரை விரிப்பாகவும் பயன்படுத்தப்பட்டது. இன்றளவும் தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கிய விசேஷங்கள் திருவிழாக்கள் வீட்டு நிகழ்வுகளின் பொழுது இந்தச் ஜமுக்காளம் பயன்படுத்தப்படுகிறது.

பருத்தி, கம்பளி பயன்படுத்தி பவானியில் ஜமுக்காளம் செய்யப்படுகிறது. இயந்திரங்களின் உதவியின்றி முழுக்க முழுக்க கையாலேயே உற்பத்தி செய்யப்படுவதுடன், நீடித்து உழைக்கக் கூடியது, கண்களைக் கவரும் வண்ணம் இந்தச் ஜமுக்காளம் தயாரிக்கப்படுவது கூடுதல் சிறப்பாக உள்ளது.

கோடாலிக்கருப்பூர் அடர்நிற காட்டன் சேலை

கும்பகோணம் - அரியலூர் சாலையில் அணைக்கரையை ஒட்டியுள்ள சிறிய கிராமமான கோடாலிக்கருப்பூரின் நெசவுத்தொழிலை ஒரு காலத்தில் உலகமே திரும்பி பார்த்தது. லண்டன், விக்டோரியா ஆல்பர்ட் மியூசியம், மும்பை சத்ரபதி சிவாஜி மியூசியம், அகமதாபாத் காலியோ மியூசியம், டில்லி நேஷனல் மியூசியம் போன்ற இடங்களில் கோடாலி கருப்பூர் சேலை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்த புடவை பொலிவிழந்து போனது, ஒரு கட்டத்தில் இந்த சேலையை நெய்வதற்கு கூட நெசவாளர்கள் இல்லாத நிலை நீடித்தது. அண்மையில் மத்திய ஜவுளித்துறை சார்பில் நெசவாளர்களுக்கு பயிற்சி அளித்து அதற்காக கூட்டுறவு சங்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

பஞ்சு போன்ற மென்மை, பார்வையை உறுத்தாத அளவுக்கு அளவான ஜரிகை வேலைப்பாடுகள் என தனித்துவமாக இருக்கிறது. அடர்ந்த நிறம்தான் தற்போதைய கோடாலி கருப்பூர் சேலைகளின் அடையாளம். 

ஆரணி பட்டு சேலைகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தயாரிக்கப்படும் பட்டுப் புடவைகளும் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாக உள்ளது. காஞ்சிபுரம் பட்டு புடவையை விட  எடை குறைவாகவும், மெல்லிய பார்டர், இரட்டை இழை ஆகியவை சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. ஆரணி பட்டுப் புடவையில் தற்பொழுது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டிசைன்கள் இருப்பது வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது . டிசைனைப் பொறுத்து, ஒரு சேலைக்கு 60 கிராம் முதல் 1 ,1/2 கிலோ வரை பட்டு  ஜரிகை தேவைப்படும்.

கோவை கோரா காட்டன் புடவைகள்

கோவை கோர காட்டன் புடவைகள் பருத்தியும் பட்டும் கலந்த கலவையாகும். நல்ல தரமான பருத்தி நூலுடன் பாரம்பரியமிக்க பட்டு நூலும் கலந்து தயாரிக்கப்படுவதால் இந்த சேலைகள் நீடித்து உழைக்கும். தமிழ்நாட்டில், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள பாரம்பரிய நெசவுக் குடும்பங்களால்  இந்த புடவைகள் வடிவமைக்கப்படுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுமுகை, கோரா பருத்தி புடவைகளின் முக்கிய உற்பத்தி இடமாக உள்ளது. காட்டன் புடவையை விரும்புபவர்களுக்கு வண்ணமயமான புடவைகள் பிடிப்பவர்களுக்கு இந்த புடவை மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Embed widget