Kanchipuram Power Shutdown: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மின்தடை.. ஸ்ரீபெரும்புதூர் மக்களே உஷாரா இருங்க
Sriperumbudur power shutdown: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செயற்பொறியாளர் , நோக்கியா 230/110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் 33 KV &11 KV feeders அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 27.05.2025 துணை மின் நிலைய பகுதிக்கு உட்பட்ட இடங்களில் நாளை மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள பகுதிகள்
சரோஜினி நகர், ராஜீவ்காந்தி நகர், ஜெமி நகர், சரளா நகர், தாம்பரம் ரோடு, பாலாஜி நகர், BVL நகர், காமராஜர் நகர், கச்சிப்பட்டு, பட்டுநூல் சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் ஆதிகேசவ பெருமாள் நகர், தெரசாபுரம், போந்தூர், தத்தனூர், கடுவஞ்சேரி, வளத்தாஞ்சேரி, குண்டுபேரம்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
தாலுக்கா அலுவலகம் சாலை, ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், மேட்டுப்பாளையம், பிள்ளைப்பாக்கம், தாத்தனூர் கண்ணந்தாங்கல் ஆகிய இடங்களிலும், இதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் தடைப்படும் என மின்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள நேரம்
மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொதுமக்கள் மின் தேவைக்கான திட்டங்களை அதற்கேற்றவாறு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.





















