ஸ்ரீபெரும்புதூர்: நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின்சாரம் இருக்குமா? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Sriperumbudur Power Shutdown Tommorow: "காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் நாளை (20-12-2025) மின்தடை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் வடகால் துணை மின் நிலையம், பிள்ளைப்பாக்கம் துணை மின் நிலையம், இருங்காடுக்கோட்டை துணை மின் நிலையம் ஆகிய இடங்களில் நாளை (20-12-2025) மின்தடை ஏற்படும் என மின்சார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருங்காடுக்கோட்டை துணை மின் நிலையம்
இருங்காடுக் கோட்டை சிப்காட், காட்ராம்பாக்கம், கீவளூர், தண்டலம், செட்டி பேடு, பாப்பன் சத்திரம், மேவலூர் குப்பம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (20-12-2025) மின்தடை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்தடை மேற்கொள்ளப்படும் நேரம் : மேலே தெரிவித்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிள்ளைபாக்கம் துணை மின் நிலையம்
பிள்ளைப்பாக்கம் சிப்காட், பிள்ளைபாக்கம் ஊராட்சி, நாவலூர், டிவிஎஸ் அப்பார்ட்மெண்ட், வெங்காடு, கிருஷ்ணா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (20-12-2025) மின்தடை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை மேற்கொள்ளப்படும் நேரம் : மேலே தெரிவித்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வல்லம் வடகால் துணை மின் நிலையம்
வல்லம் வடுகால் சிப்காட், மேட்டுப்பாளையம், வல்லம் கண்டிகை, எச்சூர், சலையனூர், பால்நல்லூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (20-12-2025) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை மேற்கொள்ளப்படும் நேரம் : மேலே தெரிவித்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





















