காஞ்சிபுரம்: நாளை மின் தடை! நீர்வள்ளூர், ஓரிக்கை பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு.
"காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (20-12-2025) பராமரிப்பு பணி காரணமாக மின் தடை மேற்கொள்ளப்பட உள்ளது"

"காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வள்ளூர் மற்றும் ஓரிக்கை ஆகிய பகுதிகளில் நாளை (20-12-2025) பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்படும் உள்ளதாக மின்சாரத் துறை அறிவித்துள்ளது"
நீர்வள்ளூர் துணை மின் நிலையத்தில் மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை அறிவிப்பு
நீர்வள்ளுர் 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் 20.12.2025 அன்று சனிக்கிழமை காலை 10:00 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் நீர்வள்ளுர்மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகள், சின்னையன் சத்திரம், ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், நீர்வள்ளுர், தொடுர், மேல்மதுரமங்களம், சிங்கில்பாடி, கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்களம், செல்வழிமங்களம், சிங்காடிவாக்கம், சின்னிவாக்கம், மருதம் ஆகிய கிராமங்களிலும், பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகள் காரை, சிறுவாக்கம், ஆண்டி சிறுவள்ளுர், நாகப்பட்டு, ஏகனாபுரம், கொட்டவாக்கம், எடையார்பாளையம், செல்லம்பட்டிடை, கோட்டூர், எலுமயன் கோட்டூர், பிச்சிவாக்கம், துளசாபுரம், கண்டிவாக்கம், 144 தண்டலம், நெல்வாய் மற்றும் மேல்படுவூர் ஆகிய கிராமங்களிலும் 20.12.2025அன்று சனிக்கிழமை காலை 10:00 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் / காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
ஓரிக்கை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபடுவதால் மின் தடை அறிவிப்பு.
ஓரிக்கை 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் 20.12.2025 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், திருக்காலிமேடு, சேக்குப்பேட்டை வடக்கு,தெற்கு மற்றும் நடுத்தெரு, எண்ணைக்காரத் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், காந்திரோடு, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசா பேட்டை ஆகிய பகுதிகளில் வரும் 20.12.2025 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்தடை ஏற்படும். இத்தகவலை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் காஞ்சிபுரம் / வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.





















