Kanchipuram Power Shutdown: ஸ்ரீபெரும்புதூர் மின் தடை: நாளை பராமரிப்பு பணி காரணமாக நீர்வள்ளூர், பரந்தூர் பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Kanchipuram power shutdown tomorrow: காஞ்சிபுரம் நீர்வள்ளூர் துணை மின் நிலையத்தில் மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், நீர்வள்ளூர் துணை மின் நிலையத்தில் மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது
மின்தடை அறிவிப்பு
நீர்வள்ளூர் 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் 18.06.2025 அன்று புதன் கிழமை காலை 10:00 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எந்தெந்த பகுதியில் மின்தடை ?
அந்த நேரத்தில் நீர்வள்ளுர் மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகள் சின்னையன் சத்திரம், ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், நீர்வள்ளுர், தொடுர், மேல்மதுரமங்களம், சிங்கில்பாடி, கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்களம், செல்வழிமங்களம், சிங்காடிவாக்கம், சின்னிவாக்கம், மருதம் ஆகிய கிராமங்களிலும், பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின் தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
காரை, சிறுவாக்கம், ஆண்டிசிறுவள்ளூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், கொட்டவாக்கம், எடையார்பாளையம், செல்லம்பட்டிடை, கோட்டூர், எலுமயன் கோட்டூர், பிச்சிவாக்கம், துளசாபுரம், கண்டிவாக்கம், 144 தண்டலம், நெல்வாய் மற்றும் மேல்படுவூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலே குறிப்பிட்டள்ளகி ராமங்களிலும் 18.06.2025 அன்று புதன் கிழமை காலை 10:00 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை மின் தடை ஏற்படும். இத்தகவலை தமிழ்நாடு மின்; பகிர்மான கழகம், காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர், ச.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.




















