மேலும் அறிய

மாவட்ட நிர்வாகம்னா இப்படித்தான் இருக்கணும்.. பழங்குடியின மக்கள் ஹேப்பி .. ஏன் தெரியுமா?

அரசு விதிமுறைகளை முறையாக கற்றுத் தந்து அரசு கட்டண செலவில் உரிமம் அளித்தது மகிழ்ச்சி என உரிமம் பெற்றவர்கள் பேட்டி

காஞ்சிபுரத்தில் புதிய முன்னெடுப்பாக 43 பழங்குடியின மற்றும் நரிக்குறவர் என மக்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர் உரிமம் பழங்குடியின மக்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழங்குடி மற்றும் நரிக்குறவர் இன மக்கள் தங்களது தொழில் நிமித்தமாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நிலையில் இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் பெற தனியார் பயிற்சி பள்ளிகளை நாடும் நிலையில் கூடுதல் கட்டணம் கேட்பதால் அவர்கள் அதனை புறக்கணித்துவிட்டு காவல்துறையிடம் அவ்வப்போது சிக்கி அபராதம் செலுத்தி வருகின்றனர். 

மாவட்ட நிர்வாகம்னா இப்படித்தான் இருக்கணும்.. பழங்குடியின மக்கள் ஹேப்பி .. ஏன் தெரியுமா?

இந்நிலையை போக்க காஞ்சிபுரம் பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களுக்கு இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றுத்தர காஞ்சிபுரம் வட்டார அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வத்தை அணுகி உள்ளனர். 

ஓட்டுநர் பயிற்சி வகுப்பு

இந்நிலையில், ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் நபர்களிடம் உரிய ஆவணங்களை பெற்று ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து, போக்குவரத்து விதிமுறைகளை 2 மணி நேரம் பயிற்சி வகுப்பாக எடுத்து அவர்களுக்கு பழகுநர் உரிமம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது ஓட்டுநர் உரிமம் 43 நபர்களுக்கு வழங்கிட இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இரட்டிப்பு மகிழ்ச்சி

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களுக்கு இருசக்கர வாகன உரிமத்தை அளித்தார். இதைப் பெற்றுக் கொண்ட வாகன ஓட்டுநர்கள்  அரசு கட்டண செலவிலேயே உரிமம் தங்களுக்கு கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி என தெரிவித்தனர். மேலும் அரசு போக்குவரத்து விதிகளை கற்றுக் கொண்டதால் வாகன விபத்து இன்றி பயணம் செய்வோம் என தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர் செல்வம், மக்கள் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பயன் அடைந்தவர்கள் கூறுவதென்ன ?

இதுகுறித்து ஓட்டுநர் உரிமம் பெற்ற மானாமதி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர் கூறுகையில், ஆசையாக பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அவ்வாறு வாங்கிய வாகனங்களை இயக்கினால், ஓட்டுநர் உரிமம் இல்லாததால் காவல்துறையினர் அபராதம் விதிப்பது தொடர் கதையாக மாறி உள்ளது. 

மாவட்ட நிர்வாகம்னா இப்படித்தான் இருக்கணும்.. பழங்குடியின மக்கள் ஹேப்பி .. ஏன் தெரியுமா?

ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் என, ஓட்டுநர் பயிற்சி பள்ளியை அணுகினால் அதிக அளவு செலவாகிறது. தனியாக சென்று எங்களுக்கு ஓட்டுநர் உரிமம் கேட்பதற்கும் தயக்கமாக இருந்து வந்தது. இந்தநிலையில் அமைப்பு சார்பில் எங்கள் தொடர்பு கொண்டு, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர்.

போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் இலவசமாக, போக்குவரத்து விதிகளை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தனர். தொடர்ந்து முறையாக எப்படி வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது எங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம்னா இப்படித்தான் இருக்கணும்.. பழங்குடியின மக்கள் ஹேப்பி .. ஏன் தெரியுமா?

இதுகுறித்து ஆம்பாக்கம் பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண் கூறுகையில், ஓட்டுனர் உரிமம் பெறுவது எங்களுக்கு சிரமமான ஒன்றாக இருந்து வந்தது. உடனடியாக இதுகுறித்து அமைப்பு மூலம் போக்குவரத்து ஆய்வாளரை அணுகிய போது இலவசமாக எங்களுக்கு அனைத்து பயிற்சிகளையும் அளித்தார். உடனடியாக லைசன்ஸ் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். இதற்காக முன்னேற்பாடுகளை செய்த அமைப்பிற்கும் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Embed widget