மேலும் அறிய
பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு இன்ப பரிசு கொடுத்த காஞ்சி எம்எல்ஏ..!
அரசு மகளிர் பள்ளியில் பயிலும் பொது தேர்வு எழுதும் மாணவியர்களுக்கு எழுது பொருள் வழங்கி வாழ்த்து தெரிவித்த காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர்

எம்எல்ஏ எழிலரசன் - மாணவிகள்
அரசு மகளிர் பள்ளியில் பயிலும் பொது தேர்வு எழுதும் மாணவியர்களுக்கு எழுது பொருள் வழங்கி வாழ்த்து தெரிவித்த காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் மாணவிகளுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடினார்
தமிழ்நாட்டில் அரசு பொது தேர்வுகள்
காஞ்சிபுரம் (Kanchipuram News): தமிழ்நாட்டில் அரசு பொது தேர்வுகள் விரைவில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவ மாணவியர்கள் அரசு பொது தேர்வுக்கான பயிற்சிகளை அதிக கவனமாக கொண்டு வருகின்றனர். மேலும் அரசு பொது தேர்வை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் 10, +1 மற்றும் +2 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பாட பிரிவுகளுக்கான தேர்வு வினா வங்கி புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குக்கு உட்பட்ட 30 - க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் எழுது பொருள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் .

இந்நிலையில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் காஞ்சிபுரம் நகரில் செயல்பட்டு வரும் ஆற்காடு நாராயணசாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 312 பத்தாம் வகுப்பு மற்றும் 512 பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் என மொத்தம் 824 மாணவிகளுக்கு தேர்வு எழுது பொருட்களான பேனா, பென்சில் , ரப்பர், ஸ்கேல் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

மேலும், அரசு பொது தேர்வுகளை பள்ளி மாணவ, மாணவிகள் எதிர் கொள்ள வேண்டிய செயல்களை எடுத்துரைத்தார். தேர்வு எழுதும் முறைகள் குறித்து ஆசிரியர் தரும் எளிய சிறு குறிப்புகளை கவனமாக கேட்டறிந்து சிறப்பான முறையில் பேர் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என மாணவ, மாணவிகளிடம் கேட்டுக் கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மாணவிகளுடன் தரையில், அமர்ந்து அவர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்ததார்.

இந்தநிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி ஏழரைசன் மாணவிகள் மத்தியில் பேசுகையில், "பொதுத்தேர்வு நெருங்க உள்ள சூழலில் இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது. தூங்குகின்ற நேரம் அன்றாட பணிகள் உள்ளிட்ட நேரங்களை கழித்து விட்டு பார்த்தால், ஒரு சில நாட்கள் மட்டுமே மிச்சம் இருக்கும். படிப்பு மட்டுமே அழியாத செல்வம், பதவிகள் ஒரு குறிப்பிட்ட காலம் தான். சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி குறிப்பிட்ட காலம் மட்டுமே இருக்கும் ஆனால் நான் படித்த, பொறியாளர் மற்றும் வழக்கறிஞர் படிப்பு என்பது என் வாழ்நாள் முழுவதும் இருக்கும். அதுபோல் நீங்களும் படிக்க வேண்டும். தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பொழுது சற்று போரடித்தால், அதே பாடத்தை படிக்காமல் வேறு பாடத்தை படிக்கும் பொழுது புத்துணர்ச்சி கொடுக்கும். உங்களுக்கு பிடித்த பாடத்தை படிக்க துவங்குங்கள் என மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கும் சென்று எழுது பொருள் வழங்கி வாழ்த்து தெரிவித்து வருகிறார். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமலதா பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion