மேலும் அறிய
Advertisement
தேர்தல் நேரத்தில் அதிகரித்துக் காட்டப்படுகிறதா கொரோனா பாதிப்பு எண்ணிக்கை? - சுகாதாரத்துறை செயலர் மறுப்பு..
தமிழகத்தில் இதுவரை உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்தியாவில் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், தேர்தலுக்காக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் காட்டப்படுவதாக கூறப்பட்ட வந்த நிலையில், தற்போது அதனை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “தேர்தலுக்காக கொரோனா எண்ணிக்கை அதிகரித்துக் காட்டப்படுவதாக சிலர் வதந்தி பரப்புகிறார்கள். அவர்கள் வந்தால் கவச உடை அணிவித்து நோயாளிகளை காண்பிக்க தயாராக இருக்கிறோம். தேர்தல் நடைபெறாத மகாராஷ்டிரா, டில்லியில் தொற்று அதிகரிப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் இதுவரை உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion