மேலும் அறிய

பாலியல் தொந்தரவு வழக்கு.. பாஜக எம்.பிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன.. டெல்லி நீதிமன்றம் பரபரப்பு

குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன என டெல்லி நீதிமன்றம் தெரிவித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் மேற்கொண்ட போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலியல் புகாரில் சிக்கிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிரான போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தபோதிலும், அவர் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்படுவாரா பிரிஜ் பூஷன் சிங்?

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன என டெல்லி நீதிமன்றம் தெரிவித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதை தொடர்ந்து, ஜூலை 18ஆம் தேதி, ஆஜராகும்படி பிரிஜ் பூஷனுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் டெல்லி காவல்துறை கடந்த ஜூன் 15ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார்களுக்கு வலு சேர்க்கும் விதமாக 25 சாட்சியங்களின் வாக்குமூலம் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் 354, 354A, 354D ஆகிய பிரிவுகளில் கீழ் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 354 பிரிவு என்பது பெண்ணை மானபங்கம் செய்ததற்காக ஜாமீனில் வெளிவர முடியாத குற்றச்சாட்டுகளுக்காக பதிவு செய்யப்படும். இதில், தண்டனை உறுதியானால் ஐந்து ஆண்டுகள் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக குற்றப்பத்திரிகை:

பிரிவு 354A என்பது பாலியல் துன்புறுத்தல் தொடர்பானது. இதில், ஜாமீன் வழங்கப்படும். இந்தக் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளி மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அச்சுறுத்தும் விதமாக மல்யுத்த வீராங்கனைகளை பின்தொடர்ந்ததாக கூறி, பிரிவு 354D பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஜாமீன் வழங்கப்படலாம். குற்றம் நிரூபணமானால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.

மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி காவல்துறை விசாரிக்க தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

பிரிஜ் பூஷன் சிங் மீது டெல்லி காவல்துறை இரண்டு வழக்குகளை பதிவு செய்தது. ஆறு மல்யுத்த வீரர்களின் புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மற்றொன்று, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, இது தொடர்பாக அளித்த புகாரை திரும்பபெற்றதால், பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மிரட்டப்பட்டதால்தான், அவர் வழக்கை திரும்பபெற்றதாக தொடர் புகார் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
Embed widget