Perarivalan: பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு.. அதிரடியாக கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம்!
கருத்து தெரிவித்த நீதிபதிகள் ஏன் பேரறிவாளனை விடுவிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.
தன்னை உச்ச நீதிமன்றம் விடுவிக்க வேண்டுமென பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை நீதிமன்ற அமர்வு இன்று விசாரணை நடத்தியது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் ஏன் பேரறிவாளனை விடுவிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.
இது குறித்து பேசிய அமர்வு, '' பேரறிவாளனை யார் விடுவிப்பது என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கும் நிலையில் அவர் ஏன் சிறையில் சிக்கி இருக்க வேண்டும்? ஏன் பேரறிவாளனை விடுவிக்கக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு. பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. எனக் குறிப்பிட்டனர்
முன்னதாக, தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரைத்த பிறகும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாக பேரறிவாளன் தரப்பு நீதிமன்றத்தில் வாதம் செய்தனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கு வரும் 7 பேரை விடுதலை செய்வது குறித்து 161 ஆவது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்கலாம் என கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆளுநர் அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். இதனையடுத்து, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முன்னாள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
2021 மே 28ம் தேதி சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக வருக்கு பரோல் வழங்க் அவரது தாய் அற்புதம்மாள் கேட்டுக்கொண்டதற்கிணங்க 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட்டது. தொடர் சிகிச்சை காரணமாக, அவருக்கு 8 முறை பரோல் வழங்கப்பட்டது. ஜனவரி 20 ஆம் தேதியுடன் பரோல் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. 2022 பிப்ரவரி, 10 வது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்