மேலும் அறிய

Triple Talaq Law: 2-ஆம் ஆண்டு நிறைவடையும் முத்தலாக் தடை சட்டம் - சாதித்தது என்ன ?

பாலின நீதி மற்றும் பாலின சமத்துவத்தினை உறுதிப்படுத்த  இந்தியாவின் அரசியலமைப்பு புத்தகமே சிறந்ததாக அமையும்

முத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 1, 2021) “இஸ்லாமிய பெண்கள் உரிமை தினம்” கடைபிடிக்கப்படும் என மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.  

முத்தலாக் தடைச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம், நாட்டில் உள்ள இஸ்லாமிய பெண்களின் “தற்சார்பு, சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை” அரசு வலுப்படுத்தியிருப்பதுடன், அவர்களது அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளும் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். முத்தலாக் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாக ஆகஸ்ட் 1, 2019 அன்று அரசு சட்டம் இயற்றியது.  

தலாக் சட்டத்தின் பின்னணி:  

2017ம் ஆண்டு shrayara banu vs Union of india வழக்கில், குறிப்பிட்ட  இஸ்லாம் கணவர்களால் அவர்களுடைய மனைவிகளை மணமுறிவு செய்யும் தலாக்-இ-பித்தத் (ஒரே சமயத்தில் ஒரே தடவையாக சொல்லும் தலாக்) வழக்கத்தை செல்லாதென தள்ளுபடி செய்தது. தலாக்-இ-பித்தத் என்பது அரசியலமைப்பு நீதி முறைமைக்கும் பெண்களின் கௌரவத்திற்கும், பாலின சமத்துவத்தின் அடிப்படைக்கும் எதிராக இருப்பதாக மனுதாரர் ஷ்ரயரா பானு நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த வழக்கம் அரசியலமைப்பு உறுதி செய்யும் பாலின சமத்துவத்திற்கும் எதிரானது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.


சட்டம் நிறைவேறியது:  2019 நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பாஜக தலைமயிலான தேசிய ஜனநாயாக கூட்டணி முஸ்லீம் பெண்கள் திருமணங்கள் மீதான் உரிமைகளின் பாதுகாப்பு  (முத்தலாக் தடை) சட்டத்தை நிறைவேற்றியது.  உண்மையில், தேர்தலுக்குப் பிந்தைய நடைபெற்ற முதல் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்ட முதல் வரைவு மசோதா இதுவாகும். சட்ட மசோதா விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் சில முக்கிய வாதங்களை முன்வைத்தார்.   


Triple Talaq Law: 2-ஆம் ஆண்டு நிறைவடையும் முத்தலாக் தடை சட்டம் - சாதித்தது என்ன ?

முதலாவதாக, உச்ச நீதிமன்றம் தலாக்-இ பித்தத் ஒதுக்கி வைத்தபோதிலும், நாட்டின் பல பகுதியிலிருந்து தலாக்-இ.பித்தத் வழியில் மணமுறிவு செய்யும் குற்றச்சாட்டுகள் வந்தன. கடந்த, இரண்டாண்டுகளில் மட்டும் 473 முத்தலாக் விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.   

இரண்டாவதாக, பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் உள்ளது போல, முத்தாலக்  தண்டிக்கப்படும் குற்றமாக (Criminal Offence) அறிவிக்கப்படுகிறது.

மூன்றாவதாக, இஸ்லாமிய சட்டங்களும் முத்தலாக் முறையை பாவமாக கொள்கிறது. 

பாலினச் சமத்துவத்தை உறுதிப்படுத்துகிறதா? 

முஸ்லீம் கணவர்களால் சொல்லப்படும் தலாக் - இ பித்தத் செல்லுபடியற்றது, சட்டத்திற்கு புறம்பானது என்று தான் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது. அதை, தண்டிக்கப்படும் குற்றமாக அறிவிக்கவில்லை.    

குடியாட்சியில், குற்றவியல் தண்டனை சமூகத்தின் கடைசி ஆயூதமாக மட்டுமே இருக்க வேண்டும். இதனடிப்படையில் தான் தகாத உறவு கிரிமினல் குற்றமில்லை என்றும், தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது. ஓரினச்சேர்க்கை குற்றமாக கொள்ளும் தண்டனை சட்டப்பிரிவு 377-ஐ உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், 2 ஆண்டுகளில் வெறும் 473 முத்தலாக் விவாகரத்து வழக்குகள் மட்டுமே பாதிவாகியுள்ளன. விவாகரத்து எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டிருந்தாலும், ஒட்டு மொத்த சமூக ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக முத்தலாக் விவகாரம் இல்லை.       

மேலும், இந்தியாவை மற்ற இஸ்லாமிய நாடுகளுடன் ஒப்பிடுவது  பிரச்சனை பூதாகரமாக்கும் செயல்லாகும். 75 வது ஆண்டுகாலம் ஜனநாயாக நாட்டு மரபை இந்தியா கொண்டுள்ளது. இன்னும், அநேக இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கு சமநீதி மறுக்கப்பட்டு வருகிறது. பாலின நீதி மற்றும் பாலின சமத்துவத்தினை உறுதிப்படுத்த  இந்தியாவின் அரசியலமைப்பு புத்தகமே சிறந்ததாக அமையும்.    

சரியில்லாத கணவனால் அவதிப்படும் இஸ்லாமிய பெண்ணின் உணர்வுகளை இந்த சமூகம் மதிப்பதாகவும் இல்லை. லவ் ஜிகாத், ரோமியா படை போன்ற பெயரில் இஸ்லாமிய மக்களின் Sexuality , Sexual Freedom மறுக்கப்பட்டு வருகிறது. காதல் எனும் பெயரால் இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு வெளிப்படையாகவே முன்வைக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட, தீவிர இந்து ஆதரவாளர்கள் முஸ்லிம் பெண்களை விற்பதற்காக Sulli Deals என்ற பெயரில் ஓப்பன் சோர்ஸ் செயலி உருவாக்கப்பட்டது. 

இதன் காரணமாக, முத்தலாக் தடை சட்டம் இஸ்லாம் பெண்களின் பாலின சமத்துவம்  என்பதைத்தாண்டி சிறுபான்மையினர் அதிகார கட்டமைப்பை உடைக்கும் செயலாக கருதப்படுகிறது.     

மேலும் வாசிக்க:  

”மாட்டுக்கறி சாப்பிடுபவர்களும், இந்துக்களும் ஒன்றல்ல” - விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி..! 

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருக்கும் குடும்பத்துக்கு அரசு நலத்திட்டங்கள் கிடையாது - உத்தரபிரதேச அரசு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget