மேலும் அறிய

விவசாயிகள் கொல்லப்படும்போது அகிலேஷும், மாயாவதியும் எங்கு சென்றார்கள்? - பிரியங்கா காந்தி

உத்தரப் பிரதேச மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் எழுப்ப மாநில கட்சிகளின் தலைவர்களான அகிலேஷ் யாதவும், மாயாவதியும் தவறிவிட்டதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்

கடந்த ஞாயிற்றுக் கிழமை உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூருக்கு சென்ற மத்திய இணை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்ற அஜய் மிஸ்ரா காரில் சென்று உள்ளார். அவருடன் ஏராளமான பாஜகவினரின் கார்களும் அணிவகுத்து சென்று இருக்கின்றன. அப்போது மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் அவ்வழியே வந்த மத்திய இணை அமைச்சரின் காரை வழிமறித்து கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அமைச்சருடன் வந்த பாஜகவினரின் கார் நிற்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகள் மீது வேகமாக மோதியது. இதில் நான்கு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் பாஜக உறுப்பினர்களாக அறியப்படும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும் அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் ஒருவரும் கலவரத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனினின்றி உயிரிழந்தார்.

விவசாயிகள் கொல்லப்படும்போது அகிலேஷும், மாயாவதியும் எங்கு சென்றார்கள்?  - பிரியங்கா காந்தி

விவசாயிகள் மீது மோதிய காரை, மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஓட்டி வந்ததாக விவசாயிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.  வன்முறை நடந்த இடத்துக்கு உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் செல்ல முயல்வதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அவரை வீட்டுக் காவலில் அடைத்தது அம்மாநில காவல் துறை. அதே போல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் விவசாயிகள் உயிரிழந்த லக்கிம்பூருக்கு செல்ல முயன்றார். அவரையும் போலீசார் கைது செய்து தனிமையான இடத்தில் அடைத்தனர்.

இந்த நிலையில், அகிலேஷ் யாதவும், மாயாவதியும் இந்த விவாகரம் குறித்து பேச தவறிவிட்டதாக பிரயங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். உத்தரப் பிரதேச மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் எழுப்ப மாநில கட்சிகளின் தலைவர்கள் இருவரும் தவறிவிட்டதாக அவர் தெரிவித்தார். "அகிலேஷ் யாதவும், மாயாவதியும் எங்கு சென்றார்கள்? ஹத்ராஸ் பாலியல் படுகொலை சம்பவமாகட்டும், லக்கிம்பூர் கேரி விவசாயிகள் தாக்குதல் சம்பவமாகட்டும் இரண்டையும் இருவரும் கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் மட்டுமே மக்களோடு மக்களாக துணை நிற்கிறது.” என பிரியங்கா காந்தி தெரிவித்து இருக்கிறார்.

லக்கிம்பூரில் நிகழ்ந்த இந்த வன்முறை தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. அந்த விசாரணையின் முடிவு வெளியான பிறகே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முடியும் என  உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார். அதே போல், உயிரிழந்த 4 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.45 லட்சம் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வாங்கித் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. அதே போல், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

37 ஓட்டுகள் போதும்.. திமுகவை தோற்கடிச்சுடலாம் - நயினார் நாகேந்திரன் கணக்கு இதுதான்!
37 ஓட்டுகள் போதும்.. திமுகவை தோற்கடிச்சுடலாம் - நயினார் நாகேந்திரன் கணக்கு இதுதான்!
BRICS Summit: அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் - ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு
BRICS Summit: அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் - ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு
திருவெண்காடு புதன்  கோயில் குடமுழுக்கு பெருவிழா: பக்தியில் மெய்சிலிர்க்க தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்..
திருவெண்காடு புதன்  கோயில் குடமுழுக்கு பெருவிழா: பக்தியில் மெய்சிலிர்க்க தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்..
நீங்க யாரு..? போக்குவரத்து அமைச்சரிடமே கேள்வி கேட்ட அரசுப்பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் - கரூரில் சம்பவம்
நீங்க யாரு..? போக்குவரத்து அமைச்சரிடமே கேள்வி கேட்ட அரசுப்பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் - கரூரில் சம்பவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
37 ஓட்டுகள் போதும்.. திமுகவை தோற்கடிச்சுடலாம் - நயினார் நாகேந்திரன் கணக்கு இதுதான்!
37 ஓட்டுகள் போதும்.. திமுகவை தோற்கடிச்சுடலாம் - நயினார் நாகேந்திரன் கணக்கு இதுதான்!
BRICS Summit: அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் - ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு
BRICS Summit: அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் - ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு
திருவெண்காடு புதன்  கோயில் குடமுழுக்கு பெருவிழா: பக்தியில் மெய்சிலிர்க்க தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்..
திருவெண்காடு புதன்  கோயில் குடமுழுக்கு பெருவிழா: பக்தியில் மெய்சிலிர்க்க தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்..
நீங்க யாரு..? போக்குவரத்து அமைச்சரிடமே கேள்வி கேட்ட அரசுப்பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் - கரூரில் சம்பவம்
நீங்க யாரு..? போக்குவரத்து அமைச்சரிடமே கேள்வி கேட்ட அரசுப்பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் - கரூரில் சம்பவம்
Tiruchendur: அரோகரா.. விண்ணதிர நடந்த திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. தமிழில் ஓதப்பட்ட மந்திரங்கள்!
Tiruchendur: அரோகரா.. விண்ணதிர நடந்த திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. தமிழில் ஓதப்பட்ட மந்திரங்கள்!
IND vs ENG 2nd Test: ஏளனமாக பேசிய ஸ்டோக்ஸ்... ஆணவத்தை அடக்கிய இந்தியா - சொன்னது ஞாபகம் இருக்கா?
IND vs ENG 2nd Test: ஏளனமாக பேசிய ஸ்டோக்ஸ்... ஆணவத்தை அடக்கிய இந்தியா - சொன்னது ஞாபகம் இருக்கா?
Mahindra Facelift: ரொம்ப வெயிட் பண்ண வேண்டாம், உடனே புதுசா கொடுக்குறோம் - மஹிந்திராவின் XEV 7e, தேதி, விலை
Mahindra Facelift: ரொம்ப வெயிட் பண்ண வேண்டாம், உடனே புதுசா கொடுக்குறோம் - மஹிந்திராவின் XEV 7e, தேதி, விலை
Top 10 News Headlines: மருத்துவ கல்லூரிகளுக்கான விதிகள் தளர்வு,  Al மூலம் கடனை அடைத்த பெண் - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines: மருத்துவ கல்லூரிகளுக்கான விதிகள் தளர்வு, Al மூலம் கடனை அடைத்த பெண் - 11 மணி செய்திகள்
Embed widget