Watch Video: 'நான்தான் நீ ..வேறில்லை.!' உயிரிழந்த குட்டியை அணைத்து தூக்கிச்சென்ற தாய் யானை! நெகிழ்ச்சி வீடியோ!
உயிரிழந்த தன்னுடையை குட்டியை துதிக்கையால் தாய் யானை பல கிலோமிட்டர்கள் தூக்கிச் சென்ற நெகிழ்ச்சி சம்பவம் மேற்குவங்கத்தில் நடந்துள்ளது.
தாய் யானை..
மேற்கு வங்கத்தின் ஜல்பைங்குரி என்ற பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் யானைக்குட்டி ஒன்று மர்மமாக இறந்து கிடந்தது. ஏன் இறந்தது என்ற விவரம் தெரியாதை நிலையில் அது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் வனத்துறை வருவதற்கு முன்பே குட்டியைத் தேடி தாய் யானை வந்தது. தேயிலைத்தோட்டத்தில் தன் குட்டி சடலமாக கிடப்பதைப் பார்த்த தாய் யானை கண்ணீர் வடித்தபடியே தன் துதிக்கையால் தூக்கிச் சென்றது.
குட்டியைத் தூக்கிக்கொண்டே பல கிமீ தூரங்களை கடந்து சென்றது குட்டி யானை. பின்னர் அந்த தாய் யானை தன் கூட்டத்துக்குள் கலந்தது. கிட்டத்தட்ட 30-35 யானைகள் அந்தக்கூட்டத்தில் இருந்தது. தன் குட்டிக்காக கிட்டத்தட்ட 8 கிமீ தாண்டி தேயிலைத் தோட்டத்துக்கு யானை வந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குட்டி இறந்துள்ளதால் தாய் யானை கோபமாக இருக்கலாம் என்பதாலும், பெரிய யானைக் கூட்டம் என்பதாலும் வனத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
#WATCH | WB: A mother elephant seen carrying carcass of her dead calf in Ambari Tea Estate, Jalpaiguri. A team of Binnaguri wildlife reached there to retrieve the carcass but elephant walked away to Redbank Tea Estate. Cause of death yet to be ascertained.
— ANI (@ANI) May 27, 2022
(Source: Unverified) pic.twitter.com/cPFSWtRDGk
தென் ஆப்பிரிக்கா..
தென் ஆப்பிரிக்காவில் தன் குட்டிக்குத் தொந்தரவாக இருந்த முதலையை ஆக்ரோஷத்துடன் கொன்ற தாய் யானையின் பாச வெளிப்பாடு குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. தென் ஆப்பிரிக்கா ஜாம்பியாவில் இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதிக்குள் நடைபெறும் படகு சவாரி என்பது மிகவும் பிரபலமான ஒன்று. அப்படி சவாரி செய்யும்போதுதான், யானை ஒன்று ஆக்ரோசமாக முதலையுடன் சண்டையிட்டு அதனைக்கொன்ற காட்சிகளை ஹான்ஸ் ஹென்ரிக் ஹாஹர் என்பவர் அதழன வீடியோ எடுத்ததோடு இணையத்திலும் பதிவிட்டார். வனப்பகுதிக்குள் ஒரு ஆற்றினுள் இருந்த முதலை தன்னுடைய துதிக்கால் யானை குத்துவது போல வீடியோ ஆரம்பமாகிறது. பிறகு தன் கால்களால் மிதித்து அதனைப்புரட்டிப்போட்டு கொல்ல முயல்கிறது. பிறகு மீண்டும் துதிக்கையால் தூக்கிப்போட்டு விலாசுகிறது.
தனது கால்களைப்பயன்படுத்தி மிதிக்க ஆரம்பிக்கும் யானை முதலை சாகும் வரை அதனை ஆக்ரோஷத்துடன் கொல்கிறது. இதனைக் கரையில் இருந்த குட்டியானையும், மற்றொரு யானையும் நின்று சந்தோஷத்துடன் வேடிக்கைப்பார்க்கிறது. மேலும் தனக்கு தொந்தரவாக இருந்த முதலையை நமது அம்மா கொன்றுவிடுவார் என்ற எண்ணத்தில் கரையில் நின்று பார்த்து ரசிக்கிறது. இதோடு முதலையின் உயிர் பிரியும் வரை தாய் யானை தனது ஆக்ரோஷத்தை நிறுத்தவில்லை. இறுதியில் தனது கோபத்தைத் தணிக்க தண்ணீரைக்குடித்துவிட்டு மீண்டும் தனது குட்டியுடன் விடைபெறுகிறது தாய் யானை…சுமார் 1.40 நிமிடங்கள் இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தாய் யானையின் பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை போன்ற பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டுவருகின்றனர்.