Watch Video: அடேங்கப்பா..! ஒரு ஆளு உயரத்திற்கு எழுந்து நிற்கும் ராஜநாகம்..! வீடியோ பாத்தா மிரண்டு போயிருவீங்க..!
ராஜநாகம் ஒன்று 6 அடி உயரத்திற்கு எழுந்து நின்று நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஊர்வன உயிரினங்களில் மிகவும் தனித்துவமான உயிரினம் பாம்பு. தண்ணீரிலும், நிலத்திலும் வாழும் வகையில் பாம்பிலே பல வகை பாம்புகள் உள்ளன. பாம்பிலே மிக உயர்ந்தது ராஜநாகம். அடர் வனப்பகுதிகளில் காணப்படும் இந்த ராஜநாகம் குடியிருப்பு பகுதிகளில் அவ்வப்போது காணப்படும்.
ராஜநாகம்:
இந்த நிலையில், இந்திய வனத்துறை அதிகாரி எனப்படும் ஐ.எஃப்.எஸ். அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ராஜநாகம் ஒன்று ஒரு ஆள் உயரத்திற்கு எழுந்து நிற்கிறது. சில நொடிகளே ஓடும் இந்த வீடியோவில் ராஜநாகம் எழுந்து நின்று கொண்டே இருக்கிறது. இந்த வீடியோவை பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
The king cobra can literally "stand up" and look at a full-grown person in the eye. When confronted, they can lift up to a third of its body off the ground. pic.twitter.com/g93Iw2WzRo
— Susanta Nanda (@susantananda3) February 27, 2023
ஐ.எப்.எஸ். அதிகாரி கடந்த 27-ந் தேதி பகிர்ந்த இந்த வீடியோவை சுமார் 5.80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அந்த வீடியோவில் பாம்பின் முழு உருவமும் பதிவாகியுள்ளது. அந்த பாம்பு சுமார் 10 அடி உயரத்திற்கு இருக்கிறது. இந்த வீடியோவிற்கு கீழே பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பாம்புகள் படமெடுத்து ஆடினாலும் ராஜநாகம் படமெடுத்து ஆடுவது மிகவும் மற்ற பாம்புகளை காட்டிலும் தனித்துவம் வாய்ந்தது ஆகும்.
விஷத்தன்மை:
ராஜநாகம் உயர்ந்து பார்க்கும்போது மனிதர்கள் உயரத்திற்கு இருக்கும். பாம்புகளிலே மிகவும் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பாக இருப்பது ராஜநாகம் ஆகும். பொதுவாகவே ராஜநாகம் 12 முதல் 13 அடி வரை நீளம் கொண்டதாக இருக்கும். ராஜநாகத்தின் விஷம் ஆளையே கொல்லும் சக்தி கொண்டது. ராஜநாகத்தின் விஷமானது ஆப்பிரிக்க கருப்பு மாம்பா பாம்புகளை விட 5 மடங்கு அதிகம் ஆகும்.
மேலும் படிக்க: Telangana: ஆளுநர் தமிழிசைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு; தெலுங்கானாவில் முற்றிய மோதல்..
மேலும் படிக்க: PM Modi Flash Light On : "எல்லாரும் மொபைல் டார்ச் லைட்டை ஆன் பண்ணுங்க” : சொன்ன பிரதமர் மோடி.. காரணம் என்ன?