Watch Video: சொன்னதையே சொல்லாத.. மேடையில் வைத்து மல்யுத்த வீரருக்கு பளார் விட்ட பாஜக எம்பி.!
பாஜக எம்பி பிரிஜ்பூஷன் ஷவ்ரன் சிங் மல்யுத்த வீரர் ஒருவரை மேடையில் வைத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சியில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டோருக்கான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜக எம்பி பிரிஜ்பூஷன் ஷரன் சிங் மல்யுத்த வீரர் ஒருவரை மேடையில் வைத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 15 வயதுக்குட்பட்டோருக்கான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், உத்திரபிரதேச மாநிலம், கைசர்கஞ்ச் தொகுதியின் பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் ஷரன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது இளைஞர் ஒருவர் தன்னையும் மல்யுத்த போட்டியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என விளையாட்டு நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார். அப்போது “இது 15 வயதுக்குட்பட்டோருக்கான விளையாட்டு; அதிக வயது உடைய உங்களை விளையாட அனுமதிக்க முடியாது” எனக்கூறியுள்ளனர்.
JHARKHAND:
— Gururaj Anjan (@Anjan94150697) December 18, 2021
Fresh shocker from the BJP!
BJP MP & Wrestling Federation of India President, Brij Bhushan Sharan Singh slaps young wrestler on stage.
Can a public servant (BJP MP) manhandle the common man? What message the BJP is sending to the country? pic.twitter.com/EwQ4LR1FAE
ஆனால் அந்த இளைஞர் தொடர்ந்து விளையாட வேண்டும் என அடம் பிடித்ததோடு, ஒருகட்டத்தில் எம்.பி இருக்கும் மேடைக்கே ஏறிவிட்டார். எம்.பியிடம் சென்று தான் விளையாட வேண்டும் என கேட்டுள்ளார். எம்பியும் விளையாட்டு விதிமுறைகளை எடுத்துக்கூறியதாக தெரிகிறது. ஆனால் தொடர்ந்து இளைஞர் வலியுறுத்தியதால் பொறுமை இழந்த எம்.பி பிரிஜ்பூஷன் ஷரன் சிங் அந்த இளைஞரை மேடையில் வைத்தே கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து அங்கிருந்த நிர்வாகிகள் அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பாஜகவின் கலாச்சாரத்திற்கு உதாரணம்.
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) December 18, 2021
ஊடகங்கள் காட்டாது. விவாதிக்கவும் மாட்டார்கள்.
மல்யுத்த போட்டியை காண ராஞ்சி சென்ற உ பி MP, மல்யுத்த வீரரை பல முறை மேடையில் வைத்து அறைகிறார்.
மோடிஜி நட்டாஜி மன்னிப்பு கேளுங்கள். https://t.co/Je7wgaO7dX
இச்சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த வீடியோவை தமிழக காங்கிரஸ் கமிட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “மோடிஜி நட்டாஜி மன்னிப்பு கேளுங்கள்” என தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: சீமான் மீது திமுக ஐடி விங்க் சார்பில் புகார்: மேடையில் செருப்பை காட்டிய விவகாரம்!