கேரளாவில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: 25 லட்சம் பேர் நீக்கப்படும் அபாயம்? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision - SIR) நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த எஸ்.ஐ.ஆர். நடைமுறை புதியதல்ல. சமீபத்தில் பீகார் சட்டமன்றத் தேர்தலின்போதும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது பல தரப்பினரின் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தபோதும், திருத்தப் பணிகள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, தேர்தல் நிறைவுற்றது. இதன் தொடர்ச்சியாகவே, நாடு முழுவதும் இந்த வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision - SIR) நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கேரளாவில், எஸ்.ஐ.ஆர்., நடைமுறைகளை வரும், 31ம் தேதி வரை நீட்டிப்பதை பரிசீலிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.தமிழகம், கேரளா, புதுச்சேரி , உத்தர பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செ ய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலை சுட்டிக்காட்டி இந்த பணிகளை நீட்டிக்க உத்தரவிடக்கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ''வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் தேர்தல் ஆணையத்தின் அவசர நடவடிக்கையால், 25 லட்சம் பேர் நீக்கப்படும் அபாயம் உள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் நடந்ததால், பலரால் இன்னமும் விண்ணப்பம் வழங்க முடியவில்லை. எனவே காலக்கெடுவை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, வலியுறுத்தினார். இதையடுத்து பேசிய நீதிபதிகள், 'இது சம்பந்தமான கோரிக்கைகளை கேரள அரசு தேர்தல் ஆணையத்திடம் நேரடியாக வழங்கலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்குவதற்கான காலக்கெடுவை வரும் 31 வரை நீட்டிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜன 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.





















