Vistaras last day: முடிந்தது விஸ்தாரா விமான சேவை - ஏர் இந்தியா சம்பவம், இந்தியாவில் சரியும் எண்ணிக்கை
Vistara Flight Service: விஸ்தாரா நிறுவனத்தின் விமான சேவை நேற்றுடன் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது.
Vistara Flight Service: விஸ்தாரா நிறுவனத்தின் விமானங்களுக்கு பயணிகள் பிரியா விடை அளித்தனர்.
விஸ்தாரா விமான சேவை:
இந்திய விமான சேவைகளில் மிக முக்கியமானது விஸ்தாரா. பெரும் பணக்காரர்கள் மட்டுமின்றி, நடுத்தர மக்களையும் விமான சேவையில் பயணிக்க வைத்ததில் இந்நிறுவனத்திற்கு பெரும்பங்கு உண்டு. அதற்கு காரணம் சாலைகளில் பயணித்த இந்தியர்களை வானத்தில் பறக்க வைக்க வேண்டும் என்ற பெரும் கனவை கொண்டிருந்த ஒரு இந்தியர் தான். அவர் வேறு யாரும் இல்லை, இந்தியாவின் உட்கட்டமைப்புகள் அனைத்திற்கும் தந்தையான ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபோய் டாடாதான். இவர் தான் முதன் முதலில் விமான சேவையை அறிமுகபடுத்தினார். விமானப் பயணம் என்றால் என்னவென்ற தெரியாமல் இருந்த இந்திய மக்களிடம் குறிப்பாக பணக்காரர்களிடம் இந்த சேவை மிக விரைவில் சென்றடைந்தது.
விஸ்தாரா உருவான வரலாறு
1932ம் ஆண்டு ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபோய் டாடாவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட விமான சேவையை அப்போது நடந்த இரண்டாம் உலகப் போரால், இந்திய அரசு தேசிய மயமாக்கியது. அதாவது 1953 ஆம் ஆண்டு விமான சேவையை தேசிய மயமாக்கிய இந்திய அரசு 1960 ஆம் ஆண்டு “ஏர் இந்தியா”என்ற பெயரையும் வைத்தது. தான் ஆசை ஆசையாய் உருவாக்கிய விமான சேவை நிறுவனம் தேசிய மயமாக்கப்பட்டதால் டாடா குழுமம் புதிய விமான சேவையை தொடங்க முடிவு எடுத்தது. இப்படி, கடந்த 2015ம் ஆண்டு உருவானதுதான் விஸ்தாரா ஏர்லைன்ஸ். சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் டாடா சன்ஸ் கைகோர்த்து இந்த விமான சேவை தொடங்கப்பட்டது.
பயணிகளை கவர்ந்த சேவை
ஏர் இந்தியாவை விட விஸ்தாரா தரமான சேவையை வழங்கியதால், வெகு விரைவாகவே மக்கள் மத்தியில் பிரபலமானது. சாமானிய மக்களுக்கு ஏற்றார் போல ஓரளவுக்கு நியாயமான விலையில் சேவை வழங்கியதாலும், மக்கள் விஸ்தாராவை விரும்பினர். இதனால் டிக்கெட் முன்பதிவும் அதிகரிக்க தொடங்கியது. மற்ற ஏர்லைன்கள் போயிங் ரக விமானங்களை பயன்படுத்தியபோது, விஸ்தாரா தனது சேவைக்கு 'ஏர் பஸ்' ரக விமானத்தையே அதிக அளவு பயன்படுத்தியது. எனவே, மற்ற விமானங்களை விட விஸ்தாரா விமானங்கள் மிகவும் வசதியாக இருந்தது. இருக்கைகள் போதுமான இட வசதியுடன் இருந்தன. தொடக்கத்தில் டெல்லி-மும்பை என்று மட்டும் இருந்த சேவை பின் நாட்களில் இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் விரிவாக்கப்பட்டது.
டாடாவுன் இணையும் விஸ்தாரா:
இந்த நிலையில் கடன் சுமையால் தத்தளித்த ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாடா குழுமம் கையகப்படுத்தியது. இந்த விமான சேவையை மேலும் விரிவாக்க விரும்பிய டாடா குழுமம் இத்துடன் விஸ்தாராவையும் இணைக்க விரும்பியது. இதற்கான நடவடிக்கைகளை தீவிர மாக்கிய டாடா குழுமம் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி விஸ்தார டிக்கெட் புக்கிங்கை நிறுத்தியது. அதன் விளைவாக விஸ்தாரா நிறுவனம், இந்திய வான்பரப்பில் தங்களது சேவையை நேற்றுடன் முடித்துக் கொண்டது. இனி விஸ்தாரா விமானங்கள் ஏர் இந்திய பிராண்டின் கீழ் இயங்கப்பட உள்ளன. இந்த இணைப்பின் மூலம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கும், ஏர் இந்தியாவில் 25.1 சதவிகித பங்குகள் கிடைக்கும்
பிரியா விடை அளித்த பயணிகள்:
My last Vistara flight before the AI-Vistara merger comes into effect on 12th November.
— Chetan Bhutani (@BhutaniChetan) November 6, 2024
UK-848, 6th November 2024.
You’ll be missed @airvistara pic.twitter.com/ifhD4S55Gr
Farewell to Vistara ❤️🩹
— Parth Suba (@parthsuba77) November 10, 2024
India’s finest domestic airline, as it takes its final flight today
Since 2015, Vistara has set new standards for service and comfort in Indian🇮🇳 skies
Thank you, Vistara, for making every journey memorable! 💜
Let us fly high to new horizons with Air… pic.twitter.com/MsenFCAK0y
Thank you for #FlyingTheNewFeeling
— Vistara (@airvistara) November 11, 2024
Here’s #ToLimitlessPossibilities pic.twitter.com/OaELl6d4T5
குறையும் விமான சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் முழு கேரியர் சேவையை தொடங்கிய ஒரே நிறுவனம் விஸ்தார மட்டுமே ஆகும். இந்நிலையில், விஸ்தாரா நிறுவனமும் தனது சேவையை நிறுத்தியதை தொடர்ந்து, கடந்த 17 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் முழு கேரியர் சேவை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது. கிங்ஃபிஷர் மற்றும் ஏர் சஹாரா ஆகிய விமான நிறுவனங்கள் கடந்த காலங்களில் இந்தியாவில் சேவை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.