ராகுல் காந்தியை பார்ப்பதற்காக ஒரு நாள் முழுவதும் காத்து கிடந்த வயதான பெண்மணி... மகிழ்ச்சியான தருணம்
வயதான பெண் ஒருவருடன் அவர் பணிவுடன் கை குலுக்கினார். மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய அந்த வயதான பெண்மணி, ராகுல் காந்தியின் கன்னங்களை அன்போடு தொட்டு மகிழ்ந்தார்.
![ராகுல் காந்தியை பார்ப்பதற்காக ஒரு நாள் முழுவதும் காத்து கிடந்த வயதான பெண்மணி... மகிழ்ச்சியான தருணம் Video Womans Gesture On Meeting Rahul Gandhi After Waiting All Day ராகுல் காந்தியை பார்ப்பதற்காக ஒரு நாள் முழுவதும் காத்து கிடந்த வயதான பெண்மணி... மகிழ்ச்சியான தருணம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/01/32602df6172e7cb70e3193ef19db9642_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராகுல் காந்தி தனது மக்களவைத் தொகுதியான கேரளாவின் வயநாடுக்கு இன்று சென்றார். அப்போது, வயதான பெண் ஒருவருடன் அவர் பணிவுடன் கை குலுக்கினார்.
மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய அந்த வயதான பெண்மணி, ராகுல் காந்தியின் கன்னங்களை அன்போடு தொட்டு மகிழ்ந்தார். இருவருக்கும் இடையே நடந்த இந்த இனிமையான தருணத்தின் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
From early morning she was waiting to see Rahul Gandhi in Wayanad. pic.twitter.com/5Z9pon8leL
— Aaron Mathew (@AaronMathewINC) July 1, 2022
இன்று காலையிலிருந்து அவரை (ராகுல் காந்தி) பார்ப்பதற்காக அந்த பெண் காத்துக் கொண்டிருப்பதாக ஒருவர் கூறுகிறார். இதுவும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 16 வினாடிகள் வீடியோவில், அந்த பெண் தரையில் அமர்ந்திருக்கிறார். அவரை சுற்றி மக்கள் கூடி இருக்கிறார்கள்.
தனது தொகுதிக்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள ராகுல் காந்தி, சமீபத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் செயல்பாட்டாளர்களால் சேதப்படுத்தப்பட்ட தனது அலுவலகத்தையும் பார்வையிட்டார்.
இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், "வன்முறை எல்லா பிரச்சினைகளை தீர்க்கும் என்ற எண்ணம் நாட்டில் எல்லா இடங்களிலும் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள்.
ஆனால், வன்முறை ஒருபோதும் பிரச்சினைகளை தீர்க்காது. அதைச் செய்வது நல்லதல்ல. அவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டனர். ஆனால், அவர்கள் மீது எனக்கு கோபமோ, விரோதமோ இல்லை" என்றார்.
வன்முறையில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்க செயல்பாட்டாளர்களை "குழந்தைகள்" என்றும் ராகுல் காந்தி கூறினார். ஞாயிற்றுக்கிழமை கோழிக்கோட்டில் இருந்து ராகுல் காந்தி டெல்லி திரும்புகிறார்.
கடந்த ஆண்டு, ஒரு வயதான பெண்மணி ராகுல் காந்தியை "தனது மகன்" என்று அழைத்து, தனது பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அவருக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த வீடியோவும் சமூகவலைதளத்தில் வைரலாகியது.
1970ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி, ராகுல் காந்தி பிறந்தபோது அவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர்களில் ஒருவர்தான் வயதான பெண்மணியான ராஜம்மா ஆவார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)