Watch Video| ஸ்வீப் ஷாட் டூ தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்- தனஶ்ரீ வர்மாவின் வைரல் வீடியோ !
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சாஹலின் மனைவி தனஶ்ரீ வெர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சில விளம்பரங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவருடைய நடிப்பில் வெளியான பூஸ்ட் விளம்பரம் அனைவரின் மனதையும் கவர்ந்து இருந்தது. அதாவது அந்த விளம்பரத்தில் பெண் ஒருவர் கிரிக்கெட் விளையாட முற்படுவார். அப்போது சிலர் அப்பெண்ணை ஏளனமாக பார்ப்பார்கள். அப்போது, இது ஆண், பெண்ணிற்கான விளையாட்டு அல்ல. அது ஸ்டாமினா அதிகம் உள்ளவர்களுக்கான விளையாட்டு என்ற வசனம் வரும். இதனால் இந்த வீடியோ பெருமளவில் வைரலானது.
இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பான இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்றை கிரிக்கெட் வீரர் சாஹலின் மனைவியான தனஶ்ரீ வெர்மா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கிரிக்கெட் இருக்கும் பல ஷாட்களை அவர் ஆடுகிறார். குறிப்பாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டையும் அவர் ஆடும் வகையில் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
View this post on Instagram
இந்த வீடியோவை தற்போது வரை பலரும் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இது போன்று பலரும் ரீல்ஸ் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தனஶ்ரீ வெர்மா ஒரு நடன கலைஞர். அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பல வீடியோக்களை இது போன்று அடிக்கடி பதிவிட்டு வருகிறார். மேலும் அவர் ஒரு யூடியூப் செனல் ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ”நாங்க கேட்டோம்.. அவரு ஓக்கே சொல்லல..” கேப்டன் கோலியை மாற்றியது தொடர்பாக கங்குலி பேச்சு..