Watch Video| ஹே மாப்பிள்ளை.. மணப்பெண் கொடுத்த பறக்கும் முத்தம் - காதல் ததும்பும் வைரல் வீடியோ!
திருமண கோலத்தில் மணப்பெண் ஒருவர் மணமகனுக்கு பறக்கும் முத்தம் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருமணங்கள் என்றால் அனைத்து நாடுகளில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு தான். அதிலும் குறிப்பாக இந்தியாவில் திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கொண்டாட்டமாக இருக்கும். அங்கு மூன்று நாட்களுக்கு மேலாக பல திருமண சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் ஒரு திருமண சடங்கு சம்பிரதாயத்தின் போது மணப்பெண் செய்த செயல் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.
அதன்படி விட்டி வேட்டிங் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒரு வட இந்திய தம்பதிகளின் திருமணம் ஒன்று நடைபெறுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில், மணப்பெண் தயாராகி அடுக்கு மாடி வீட்டில் இருக்கிறார். அதற்கு கீழே மணமகன் குதிரை சவாரி செய்து வருகிறார். அப்போது மணப்பெண் மாடியிலிருந்து அவரை அழைத்து மேலே பார்க்க வைக்கிறார்.
View this post on Instagram
மணமகன் மேலே பார்த்தவுடன் ஃபிளையிங் கிஸ் ஒன்றை அவர் கொடுக்கிறார். அது காண்போரை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த தம்பதிகளிடையே உள்ள அன்பின் வெளிப்பாட்டையும் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவை பலரும் பார்த்து லைக் செய்து ஷேர் செய்து வருகிறார்கள்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ''இது அப்பா யூஸ் பண்ணது''! விங் கமாண்டோவின் தொப்பியை தலையில் மாட்டிய மகன்.! கண்கலங்கிய கூட்டம்!