மேலும் அறிய

Watch Video: ''இது அப்பா யூஸ் பண்ணது''! விங் கமாண்டோவின் தொப்பியை தலையில் மாட்டிய மகன்.! கண்கலங்கிய கூட்டம்!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டோ பிரித்விசிங் சவுகானின் சடலத்தின் மீது வைக்கப்பட்டிருந்த அவரது தொப்பியை அவரது மகனும், மகளும் அணிந்த நெகிழ்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.

குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே வேதனைக்குள்ளாக்கியது. தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்கள் நேற்று டெல்லியில் தகனம் செய்யப்பட்ட நிலையில், இன்று பிற வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டது.

Watch Video: ''இது அப்பா யூஸ் பண்ணது''! விங் கமாண்டோவின் தொப்பியை தலையில் மாட்டிய மகன்.! கண்கலங்கிய கூட்டம்!

விங் கமாண்டர் பிரித்விசிங் சவுகானின் உடல் அவரது சொந்த ஊரான ஆக்ராவிற்கு அனுப்பப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அவரது குடும்பத்தினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இந்த இறுதிச்சடங்கின்போது விங் கமாண்டர் பிரித்விசிங் சவுகான் சடலம் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியின் மீது அவரது விமானப்படை தொப்பி வைக்கப்பட்டிருந்தது.

அவரது சடலத்தின் அருகே ஏதுமே அறியாமல் நின்று கொண்டிருந்த அவரது ஏழு வயது மகன், மலர்கள் படர்ந்திருந்த அந்த தொப்பியை எடுத்து தலையில் அணிந்துகொண்டான். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? சிங்கத்திற்கு பிறகு சிங்கக்குட்டி என்பது போல பிரித்வி சிங் சவுகான் மகன் அவிராஜ் தனது தந்தையின் ராணுவ தொப்பியை அணிந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவிராஜ் தனது தந்தையின் தொப்பியை அணிந்த பிறகு, அந்த தொப்பியை தனது மகளுக்கும் அணிவித்து தனது கணவர் புகைப்படம் முன்பு விங்கமாண்டர் சிவராஜ்சிங் சவுகான் மனைவி காமினி நின்றது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Watch Video: ''இது அப்பா யூஸ் பண்ணது''! விங் கமாண்டோவின் தொப்பியை தலையில் மாட்டிய மகன்.! கண்கலங்கிய கூட்டம்!

நான்கு அக்காக்களுடன் பிறந்த பிரித்விசிங் சவுகான் இந்திய விமானப்படையில் 2000ம் ஆண்டு இணைந்தார். 2007ம் ஆண்டு பிரித்விசிங் சவுகான் காமினியை திருமணம் செய்தார். இவர்களுக்கு 12 வயதான ஆராத்யா என்ற மகளும், அவிராஜ் என்ற 7 வயதான மகனும் உள்ளனர். தனது சகோதரிகளுடன் ரக்‌ஷா பந்தனை கொண்டாடிய பிரித்விசிங் ஜனவரி மாதம் வீட்டிற்கு வருவதாக கூறிவிட்டுச் சென்றிருந்தார். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
Embed widget