மேலும் அறிய

Uttarkashi Tunnel Collapse: உயிரைக் காப்பாற்ற போராட்டம்! தொழிலாளர்களை மீட்க இன்னும் 4 நாட்களா? அதிகாரிகள் சொன்னது என்ன?

உத்தரகாசியில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியின் போது, சுமார் 25 டன் எடை கொண்ட ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளில் சிக்கி கடந்த வெள்ளிக்கிழமை உடைந்தது. 

உத்தரகாசியில் கடந்த இரண்டு வாரங்களாக சில்க்யாரா-பர்கோட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றுடன் மீட்பு பணிகள் 16வது நாளை தொட்டுள்ளது. நேற்று புதிய முயற்சியாக சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் சுமார் 20 மீட்டர் வரை துளையிடும் பணி நடைபெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்களை மீட்க போடப்பட்ட 5 திட்டங்களில் செங்குத்து துளையிடுதலும் ஒன்றாகும். சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை சென்றடைய ஏற்கனவே 19. 2 மீட்டர் துளை போடப்பட்ட நிலையில், இன்னும் 86 மீட்டர் செங்குத்து துளையிடும் பணி மீதம் இருக்கிறது. இந்த பணிகள் முழுமையடைய இன்னும் 4 நாட்களாவது ஆகும் என்று கூறப்படுகிறது. 

தொழிலாளர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் - அதிகாரிகள் தகவல்

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் லிமிடெட் (NHIDCL) நிர்வாக இயக்குனர் மஹ்மூத் அகமது கூறியதாவது, “சட்லஜ் ஹைட்ரோபவர் கார்ப்பரேஷன் தொடங்கியுள்ள செங்குத்து துளையிடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. ஏதேனும் சிக்கல்கள் இல்லாமல் இப்படியே தொடர்ந்தால், வரும் வியாழன் வரை அதாவது இன்னும் நான்கு நாட்களில் முடித்துவிடலாம் என எதிர்பார்க்கலாம். 700 மிமீ குழாய்கள் துளையிட்டு 'எஸ்கேப் பாதை' உருவாக்கப்படுகிறது. இதிலிருந்து சிறிது தொலைவில், 70 மீட்டரை எட்டிய 200 மிமீ விட்டம் கொண்ட மெல்லிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.  

துளையிடுவதில் ஏற்பட்ட சிக்கல்கள்: 

சுரங்கப்பாதையின் சில்க்யாரா முனையிலிருந்து அமெரிக்கன் ஆகர் இயந்திரம் மூலம் கிடைமட்டமாக துளையிடுவதில் மீண்டும் மீண்டும் சிக்கல்கள் ஏற்பட்டதால், தொழிலாளர்களை சென்றடைய செங்குத்து துளையிடல் என்னும் முறை தேர்வு செய்யப்பட்டது. சுரங்கப்பாதையில் 60 மீட்டர் பரப்பளவில் இடிபாடுகள் பரவியுள்ளன. இதனால் சுமார் 25 டன் எடை கொண்ட ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் அந்த இடிபாடுகளில் சிக்கி கடந்த வெள்ளிக்கிழமை உடைந்தது. 

இதுகுறித்து மீட்பு பணிகளுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ள நோடல் அதிகாரி நீரஜ் கைர்வால் கூறியதாவது: பிளாஸ்மா கட்டர் மற்றும் லேசர் கட்டர் மூலம் இடிபாடுகளில் சிக்கிய ஆஜர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. இரவு 7 மணி நிலவரப்படி 8.15 மீட்டர் தூரம் மட்டுமே ஆஜர் இயந்திரம் வெளியே எடுக்க முடிந்தது. பிளாஸ்மா கட்டர் ஹைதராபாத்தில் இருந்து சில்க்யாராவுக்கு நேற்று காலை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.” என்று தெரிவித்தார்.

தொடரும் உயிரைக் காப்பாற்றும் போராட்டம்:

ஆகர் இயந்திரத்தின் பாகங்கள் முழுமையாக அகற்றப்பட்டவுடன், மீதியுள்ள 10-12 மீட்டர் இடிபாடுகளை மீட்புப் பணியாளர்கள் கையால் துளையிட்டு அகற்றுவார்கள். ஒரு குறுகிய இடத்திற்குள் இந்த கையால் நடத்தப்படும் உடைப்பு பணியில், ஆகர் இயந்திரத்தினால் ஏற்கனவே போடப்பட்ட துளைக்குள் சென்று கைகளால் துளையிடுவார். பின்னே செல்லும் மற்ற தொழிலாளர்கள் ஒரு கப்பி மூலம் குப்பைகளை வெளியே அனுப்புவர். ஆனால், இந்த கைகளால் துளையிடும் பணி அதிக நேரம் எடுக்கும் என தெரிகிறது. இதற்கிடையில், சுரங்கப்பாதையின் பார்கோட் முனையிலிருந்தும் தோண்டும் பணி நடைபெற்று வருவதாகவும், இதுவரை 10 மீட்டர் தோண்டும் பணி நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கரையில் இருந்து மொத்தம் 483 மீட்டர் தோண்டும் பணி நடைபெற 40 நாட்கள் ஆகலாம் என்றும், இது மாற்று வழியாகவே இந்த தோண்டும் பணி நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

தலைப்பு செய்திகள்

கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget