மேலும் அறிய

பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த வார்டு பாய்.. வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததால் அதிர்ச்சி!

உத்தர பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பெண்ணுக்கு வார்டு பாய் அறுவை சிகிக்கை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண்ணுக்கு வார்டு பாய் அறுவை சிகிக்கை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாணமாக படுக்கவைக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ததோடு அதை வீடியோவாக எடுத்து வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார் அவர்.

உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்: சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக, மக்கள் மத்தியில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நெருக்கடிக்கு மத்தியில், அந்த வார்டு பாய் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அறுவை சிகிச்சையின்போது, ஆபரேஷன் தியேட்டரில் அந்த பெண் நிர்வாணமாக கிடந்ததும் மருத்துவர்களுக்கு வார்டு பாய் உதவி செய்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 

அறுவை சிகிச்சை நடைமுறையின் வீடியோவை தனது போனில் பதிவு செய்து அதை சமூக ஊடக கணக்கில் அந்த வார்டு பாய் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த மக்கள், அந்த வார்டு பாயின் செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சமூக வலைதளங்களில் வலியுறுத்தினர்.

நிர்வாணமாக படுக்கவைக்கப்பட்ட பெண்: ஹர்தியாவில் அமைந்துள்ள பஸ்தி கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கண் மையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையின் இயக்குநராக உள்ள சஞ்சய் குமாரின் அறிவுறுத்தலின் பேரில் அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வார்டு பாய் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை இயக்குநர் சஞ்சய் குமார் கூறுகையில், "இந்த சம்பவம் குறித்து எனக்கு தெரியாது. மருத்துவமனை நிர்வாகம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை துவக்கியுள்ளது. வார்டு பாயின் செயலுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சுகாதாரத்துறை ஒரு குழுவை அமைத்துள்ளது. குற்றவாளிகளை தப்பிக்கவிட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மருத்துவ அதிகாரியை (எம்ஓஐசி) மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது.

எந்த வித அலட்சியத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும், குற்றவாளிகள் தங்கள் இழிவான செயலுக்கு கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சுகாதாரத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget