ஏப்ரல் மாதத்தில் 10 ட்ரில்லியன் இந்திய ரூபாய் பரிவர்த்தனை : UPI-இல் ஒரு சாதனை..
மார்ச் 2022 இல் ரூ.9.6 டிரில்லியன் மதிப்புள்ள 5.4 பில்லியன் பரிவர்த்தனைகளை UPI பதிவு செய்துள்ளது.

டிஜிட்டல் பேமெண்ட் தளமான யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI), ஏப்ரல் 2022ல் 5.58 பில்லியன் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது. இது இண்டர்ஃபேஸ் தொடங்கப்பட்டதில் இருந்து அந்தப் பேமெண்ட் தளத்தின் மற்ற பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடும்போது இது அதிகமானது என்று இந்திய தேசிய பேமெண்ட் கழகத்தின் (என்பிசிஐ) தரவு தெரிவித்துள்ளது. மதிப்பின் அடிப்படையில், பணம் செலுத்தும் தளம் ரூ.9.83 டிரில்லியன் மதிப்புள்ள பரிவர்த்தனைகளைக் கண்டுள்ளது.
மார்ச் 2022 இல் ரூ.9.6 டிரில்லியன் மதிப்புள்ள 5.4 பில்லியன் பரிவர்த்தனைகளை UPI பதிவு செய்துள்ளது. ஒரு மாத அடிப்படையில், UPI பரிவர்த்தனைகளின் அளவு 3.33 சதவீத உயர்வையும், பரிவர்த்தனைகளின் மதிப்பில் 2.36 சதவிகித அதிகரிப்பையும் பதிவு செய்துள்ளது.
மேலும், ஆண்டுக்கு ஆண்டு பரிவர்த்தனை அடிப்படையில், பரிவர்த்தனைகளின் அளவு 111 சதவிகிதம் உயர்ந்தது மற்றும் பரிவர்த்தனைகளின் மதிப்பும் 100 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஏப்ரல் 2021ல் ரூ.4.93 டிரில்லியன் மதிப்புள்ள 2.64 பில்லியன் பரிவர்த்தனைகளை UPI செயல்படுத்தியுள்ளது.
2016ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, UPI பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, இது கொரோனா தொற்றுநோயால் தூண்டப்பட்டது. 2021-22 நிதியாண்டில் UPI பரிவர்த்தனை மதிப்புகளில் அமெரிக்க டாலர் ஒரு ட்ரில்லியன் மதிப்பை கடந்துள்ளது. பணம் செலுத்தும் முறையின் முக்கிய மைல்கல்லாக இது கருதப்படுகிறது.
UPI, RuPay, Bharat Bill Pay போன்றவற்றைக் கையாளும் தாய் நிறுவனமான தேசிய பேமெண்ட் கழகம், அடுத்த 2-3 ஆண்டுகளில் ஒரு நாளைக்கு அமெரிக்க டாலர் 1 பில்லியன் மதிப்பிலான UPI பரிவர்த்தனைகளை இலக்காகக் கொண்டுள்ளது.
NPCI க்கு இரண்டு முக்கியப் பணிகள் உள்ளன - தொலைபேசிகளில் UPI மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான ஆஃப்லைன் பயன்முறையை இயக்குதல். மற்றொருபக்கம் ஃப்யூச்சர் போன்களுக்கான UPI 123Payம் சோதனை செய்யப்பட்டு வருகிறது, அதே நேரத்தில் UPI லைட் ஆஃப்லைன் பயன்முறையில் எவ்வாறு செயல்படும் என்பது குறித்த சுற்றறிக்கையை NPCI வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் கொரோனாவிற்கு பிறகு எப்படி இருக்கிறது குறித்து இண்டஸ் வேலி அறிக்கை 2022 என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையை ப்ளூம் வென்சர்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிலுள்ள பணப்பரிவர்த்தனை, வேலை வாய்ப்பு, இணையதள பயன்பாடு ஆகியவை குறித்து பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி இந்தியாவில் கடந்த ஒராண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் யுபிஐ பரிவர்த்தனைகள் 43% ஆக இருந்துள்ளது. இது கடந்த் ஆண்டு நடைபெற்ற கிரேடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளைவிட மிகவும் அதிகமானது எனத் தெரியவந்துள்ளது. மேலும் 50% இந்தியர்கள் இன்னும் தங்களுடைய பணபரிவர்த்தனைகளுக்கு பணம் அளிக்கும் முறையை தொடர்ந்து பின்பற்றி வருவதும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



















