wives share husband : உனக்கு 15 நாள்..! எனக்கு 15 நாள்..! கணவனை பங்கு போட்ட மனைவிகள்...!
பீகாரில் இரண்டு மனைவிகளை திருமணம் செய்த கணவரை மாதத்திற்கு தலா 15 நாட்கள் ஒவ்வொருவருடனும் வசிக்குமாறு அந்த மாநிலத்தில் உள்ள பூர்ணியா காவல்நிலைய குடும்பநல மையம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பல இடங்களில் திருமணங்களிலும், திருமணத்திற்கு பிறகும் பல வினோத சம்பவங்கள் அரங்கேறுவது வழக்கம். ஆனால், பீகார் மாநிலத்தில் பாட்னாவில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள கோதியாரி மாவட்டத்தில் உள்ள பவானிபூர்தானா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் பெண் ஒருவரை திருமணம் செய்தார். திருமணமாகிய பிறகுதான் தனது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகிய விவகாரம் அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் பூர்ணியா காவல்நிலையத்தில் உள்ள குடும்பநல ஆலோசனை மையத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு, அந்த கணவரையும், அவரது இரண்டு மனைவிகளையும் அழைத்து போலீசார், வழக்கறிஞர்கள் அடங்கிய பூர்ணியா காவல்நிலைய ஆலோசனை மையத்தினர் விசாரித்தனர். அவரும் தனது இரு மனைவிகளுடனும் தனித்தனி வீடுகளில் வசித்து வருவதை ஒப்புக்கொண்டார்.
பின்னர், இரு மனைவிகளும் தனது கணவனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டனர். இதனால், நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு இரு மனைவிகளும் கணவனுடன் சேர்ந்து வாழ ஆலோசனை மையம் அறிவுறுத்தியது. அதாவது, 15 நாட்களுக்கு ஒரு மனைவி வீட்டிலும், அடுத்த 15 நாட்களுக்கு மற்றொரு மனைவி வீட்டிலும் கணவர் வசிக்கவும் அறிவுறுத்தினர். அவர்களின் ஆலோசனையை இரு மனைவிகளும் ஏற்றுக்கொண்டனர்.
பரிவார் ப்ரமார்ஷ் கேந்த்ரா எனப்படும் பூர்ணியா காவல்நிலைய ஆலோசனை மையம் 2004ம் ஆண்டு அந்த மாநிலத்தில் நிறுவப்பட்டது. இந்த ஆலோசனை மையத்தால் பல்வேறு வழக்குகள் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டு, சுமூகமாக முடிவு காணப்பட்டுள்ளது. அந்த மாநில முதல்வர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் இந்த ஆலோசனை மையத்திற்கு பல முறை பாராட்டு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்த கணவனை இரண்டு மனைவிகளுடனும் 15 நாட்களுக்கு ஒருமுறை வசித்துக்கொள்ளுமாறு கூறியிருப்பதாவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்