மேலும் அறிய

Income Tax Filing: வருமான வரி தாக்கலுக்கு ஜூலை 31 கடைசி நாள்.. காலக்கெடு நீடிக்கப்படாது.. வருவாய் செயலாளர் திட்டவட்டம்..

வருமான வரி தாக்கலுக்கு காலக்கெடு நீடிக்கப்படாது என மத்திய வருவாய் செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்

வருமான வரி தாக்கலுக்கு வருகிற ஜூலை 31 ஆம் தேதியே கடைசி நாள் என்றும் இதனை நீடிக்க எந்த திட்டமும் இல்லை என்றும் மத்திய வருவாய் செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

மத்திய வருவாய் செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், “ 2022 – 2023 ஆம் ஆண்டு வருமான வரி தாக்கல் கடைசி நாளான ஜூலை 31 ஆம் தேதி சுமார் 5.83 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருந்தனர். இந்த ஆண்டு அதிகமானோர் தாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்காக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியிருந்தார்.

மேலும், “ வருமான வரியை தாக்கல் செய்ய கடைசி வரை காத்திருக்க வேண்டாம். விரைந்து தாக்கல் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. காலக்கெடு நீடிக்கப்படும் என நம்ப வேண்டாம். அதற்கான எந்த திட்டமும் அரசிடம் தற்போது வரை இல்லை” என குறிப்பிட்டிருந்தார்.

ஜூலை 12 ஆம் தேதி வரை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர், ஜூலை 12, 2022 ஆம் ஆண்டு 11.8 மில்லியன் நபர்கள் வரி தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சுமார் 22 மில்லியன் ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள என்றும்  இதனால் காலக்கெடுவை நீடிக்க வேண்டிய சூழல் எதுவுமில்லை என்றும் தெரிவித்துள்ளார். வரி திரட்டல் இலக்கைப் பொறுத்தவரை, வளர்ச்சி விகிதமான 10.5 சதவீதத்துக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்  என சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

2023 -  2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டின் அடிப்படையில், நடப்பாண்டில் வரி வருவாய் சுமார் ரூபாய் 33.61 லட்சம் கோடியாக இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரு நிறுவனம் மற்றும் தனி நபர் வருமான வரியை விட, 10.5 சதவீதம் அதிக வரியை திரட்ட அரசு திட்டமிட்டுள்ளதாகவும், சுங்க வரி வசூலில் 11 சதவீதம் அதிகரித்து 2.33 கோடி உயரும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடுவை தாண்டி வருமான வரி தாக்கல் செய்யப்பட்டால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Bengaluru Power Cut: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்.. பெங்களூரில் மின் தடை அபாயம்? அதிர்ச்சியில் மக்கள்
Bengaluru Power Cut: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்.. பெங்களூரில் மின் தடை அபாயம்? அதிர்ச்சியில் மக்கள்
ரயில் பயணிகளுக்கு ஸ்வீட் செய்தி! ஒரே PNR-ல் பயணமா.. இனி இதை மட்டும் போதும்! ரயில்வே கொண்டுவந்த புதிய விதி
ரயில் பயணிகளுக்கு ஸ்வீட் செய்தி! ஒரே PNR-ல் பயணமா.. இனி இதை மட்டும் போதும்! ரயில்வே கொண்டுவந்த புதிய விதி
Top 10 News Headlines: பெட்ரோலுக்கு அலைமோதும் மக்கள்.. டென்ஷனான விஜய்.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: பெட்ரோலுக்கு அலைமோதும் மக்கள்.. டென்ஷனான விஜய்.. 11 மணி செய்திகள் இதோ!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget