"தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவர்களை தயார்ப்படுத்தும் புதுச்சேரி NIT" மத்திய அமைச்சர் புகழாரம்!
எதிர்கால தொழில்நுட்ப சவால்களுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதில் புதுச்சேரி NIT பெரும் பங்காற்றி இருப்பதாக மத்திய அமைச்சர் சுகந்த மஜூம்தார் புகழாரம் சூட்டியுள்ளார்.

வளர்ந்துவரும் இந்திய கல்வி அமைப்பு மற்றும் எதிர்கால தொழில்நுட்ப சவால்களுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதில் புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகம் பெரும் பங்காற்றி இருப்பதாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தார் புகழாரம் சூட்டியுள்ளார்.
அசத்தும் புதுச்சேரி NIT:
புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் 15-வது நிறுவன தினம் இன்று (27.02.2025) காரைக்காலில் அமைந்துள்ள அந்நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது. அத்துடன் சுமார் 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்பு, 1 கோடியே 9 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள CORE ஆய்வக திறப்பு விழா, தொழில்நுட்ப விழாவான கியானித்’25 நிகழ்ச்சியின் தொடக்கவிழா போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த விழாவில் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் முனைவர் சுகந்த மஜூம்தார் தலைமை விருந்தினராக பங்கேற்று பணியாளர் குடியிருப்பு, ஆய்வகத்தை திறந்துவைத்தார். இந்த விழாவில் முனைவர் வி. டில்லிபாபு, காவேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புகழ்ந்து தள்ளிய மத்திய அமைச்சர்:
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர், வளர்ந்துவரும் இந்திய கல்வி அமைப்பு மற்றும் எதிர்கால தொழில்நுட்ப சவால்களுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதில் புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் பங்களிப்பு குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன், மண்டல அளவிலான வளர்ச்சியில் இந்த நிறுவனம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி தேசிய தொழில் நுட்பக்கழகத்தின் முன்னாள் இயக்குனர் முனைவர். கி. சங்கர நாராயணசாமி கலந்துகொண்டார். இறுதியாக தரவுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்தின் ஆசிரியர்களான முனைவர். N. செந்தில் குமார், முனைவர். ஜி.எஸ் மஹாபத்ரா, முனைவர். எம்விஏ ராஜு பாகுபாலேந்திருனி, முனைவர். வி. கோவிந்தராஜ் மற்றும் முனைவர். ஜி. லட்சுமி சுதா ஆகியோருக்கு ஆராய்ச்சியாளர்களுக்கான அங்கீகார விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...





















