மேலும் அறிய

G20: உலக வெப்பமயமாதலை தடுக்க ஜி20 நாடுகள் ஒருங்கிணைந்து  செயல்பட வேண்டும் - மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்

2030ம் ஆண்டிற்குள், நாட்டின் 50 சதவீத மின் உற்பத்தித்திறனை, புதைப்படிவமற்ற எரிபொருள் அடிப்படையில் பூர்த்தி செய்ய,  இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்

உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாடு சவால்களை முறியடிக்கும் முயற்சியில் ஜி20 நாடுகள் ஒருங்கிணைந்து  செயல்பட வேண்டும் என மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர்  ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.

மின்பகிர்மானப் பணிக்குழுக் கூட்டம்:

பெங்களூருவில் இன்று துவங்கிய முதல் மின்பகிர்மானப் பணிக்குழுக் கூட்டத்தில்  உரையாற்றிய எரிசக்தித்துறை அமைச்சர்  ஆர்.கே. சிங், 2005 முதல் 2030ம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு தீவிரத்தை 45 சதவீதமாகக் குறைக்க இந்தியா முடிவு எடுத்து இருப்பதாக குறிப்பிட்டார்.

G20: உலக வெப்பமயமாதலை தடுக்க ஜி20 நாடுகள் ஒருங்கிணைந்து  செயல்பட வேண்டும் -  மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்

2030ம் ஆண்டிற்குள், நாட்டின் 50 சதவீத மின் உற்பத்தித்திறனை, புதைப்படிவமற்ற எரிபொருள் அடிப்படையிலான  எரிசக்தி மூலம் பூர்த்தி செய்ய,  இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். 

பருவநிலை மாறுபாடு குறித்த செயல் குறியீட்டில், இந்தியா தற்போது  முதல் 5 நாடுகளுக்குள் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் பல்வேறு எரிசக்தி சேமிப்பு திட்டங்கள் வாயிலாக, நாட்டின் கார்பன் உமிழ்வு ஆண்டுக்கு 267.9 மில்லியன் டன்னாக இருப்பதாகவும், இதன்மூலம், 18.5 பில்லியன் டாலர் நிதி சேமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. ஆர்.கே. சிங், தற்போது நடைமுறையில் கொண்டுள்ள எரிசக்தி தளத்தை இந்தியா எவ்விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாது என்றும், எரிசக்தி  பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து வளங்களையும் ஆராயும் என்றும் குறிப்பிட்டார்.

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்

இக்கூட்டத்தில் சிறப்பு உரையாற்றிய, மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, சுத்தமான எரிசக்திக்கான உலகளாவிய அணுகுமுறையை அடைய சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றார். இந்தியர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையையும், இயற்கை வளம் சுரண்டப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பதாக குறிப்பிட்டார். குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி என்பதே வாழ்வின் தாரக மந்திரம். நமது கலாச்சாரமும், வாழ்வியல் முறையும் சுற்றுப் பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த அம்சங்கள் என்றும்  அமைச்சர் கூறினார்.

எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்களின் அடிப்படையில், ஜி-20 நாடுகளுக்கு இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த முதல் மின்பகிர்மானப் பணிக்குழுக்கூட்டம் நடைபெறுகிறது.  ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதே இந்த நிகழ்ச்சியின் கருப்பொருளாக அமைந்துள்ளது.

இக்கூட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை தலைவர் ரெனால்டோ டோமித்  காடின்ஹோ, பிரேசில்  வெளியுறவுத்துறை அமைச்சர் அலோக் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஜி 20 உறுப்பு நாடுகள் உட்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள், 9 சிறப்பு அழைப்பாளர்கள், உலக வங்கி மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த 3 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் - திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
Embed widget