"இது தேசிய பிரச்னை.. கட்டுப்படுத்தனும்" நீரிழிவு நோய் குறித்து மத்திய அமைச்சர் கருத்து!
நீரிழிவு நோயால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதால், இது இந்தியாவின் தேசிய பிரச்னையாக உள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
உலக நீரிழிவு தினமான இன்று புகழ்பெற்ற நீரிழிவு நிபுணரான மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவில் நீரிழிவு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
"இந்தியாவின் தேசிய பிரச்னை"
சர்வதேச நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் பீட்டர் ஸ்வார்ட்ஸ் உட்பட நீரிழிவு மருத்துவத் துறையில் மிகவும் பிரபலமானவர்களிடையே உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்த ஆண்டின் கருப்பொருளான "தடைகளைக் களைதல், இடைவெளிகளை நிரப்புதல்" என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு நபருக்கும் விலை குறைவான, உயர்தர நீரிழிவு சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஒன்றுபட்ட அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்தார். லட்சக்கணக்கானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், இது இந்தியாவின் தேசிய பிரச்னையாக உள்ளது. அதை எதிர்கொள்வதற்கான சவால் அதிகரித்துள்ளது என்று கூறினார்.
சுகாதார அணுகல், விழிப்புணர்வு மற்றும் சிகிச்சையை பின்பற்றுவதில் உள்ள இடைவெளிகளை அவர் சுட்டிக்காட்டினார். நோய் கண்டறியப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் தங்கள் நிலை குறித்து அறிந்திருக்கவில்லை அல்லது நிதி அல்லது தகவல் தடைகள் காரணமாக வழக்கமான சிகிச்சையை மேற்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சர் பேசியது என்ன?
இடைவெளியின் காரணமாகவே இது நிகழ்கிறது என்றும் இதில் பொது மற்றும் தனியார் துறைகளின் கவனமும் நடவடிக்கையும் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
உள்நாட்டில் பொது மற்றும் தனியார்துறையின் கூட்டாண்மை, சர்வதேச அளவில் பொது-தனியார் கூட்டாண்மையுடன் ஒத்துழைத்தல் என்று கருத்தை அறிமுகம் செய்து வைத்து பேசிய மத்திய அமைச்சர், "இந்தியாவின் பொது மற்றும் தனியார் துறைகள் உள்நாட்டில் ஒன்றிணைந்து சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் அதே நேரத்தில் சர்வதேச அளவில் அரசு மற்றும் தனியார் துறை இணைந்து ஈடுபடும் .
இந்த கூட்டாண்மை மாதிரியை உருவாக்குவதன் மூலம், இந்தியா புதிய கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தவும், சுகாதார அணுகலை மேம்படுத்தவும், நீரிழிவு சிகிச்சைக்கு நிலையான, அளவிடக்கூடிய தீர்வுகளை இயக்கவும் முடியும்" என்றார்.
இதையும் படிக்க: TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!