மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! - மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம்
பண்டிகைக் காலம் தொடங்க உள்ள நிலையில், அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பண்டிகைக் காலம் தொடங்க உள்ள நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கக்கோரி மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
மாநில செயலர்களுக்கு கடிதம்
இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ள மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண், பண்டிகைக் காலம் தொடங்க உள்ள நிலையில், அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும், மக்கள அதிகம் கூடும் திருவிழாக்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா
சமீபகாலமாக நாடு முழுவதும் கொரோனா பரவல் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 27 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 9 ஆயிரத்து 486 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேபோல் தமிழ்நாட்டில் நேற்று (ஜூன். 27) ஒரே நாளில் புதிதாக 1,461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை 34,69,805 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 697 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், தமிழ் மாதங்களில் அதிக பண்டிகைகள், திருவிழாக்களைக் கொண்ட ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையிலும் பிற மாநிலங்களில் யாத்திரைகளுக்கான காலம் தொடங்கியுள்ள நிலையிலும் மத்திய அரசு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Plastic Ban: இனியாவது மூச்சு விடுமா பூமி? ஜூலை முதல் பிளாஸ்டிக் தடை - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்