மேலும் அறிய

Twitter vs Government Row:இந்தியாவை அவமதிக்கிறது ட்விட்டர்; மத்திய அரசு காட்டம்!

புதிய விதிமுறைகளை வேண்டுமென்றே எதிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் சட்ட அமைப்பை குறைவாக மதிப்பிட முயற்சிக்கிறது டுவிட்டர் என்கிறது மத்திய அரசு.

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் (Information Technology (IntermediaryGuidelines and Digital Media Ethics Code) Rules 2021) தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. முன்னதாக, ட்விட்டர் நிறுவன செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், " எங்களுடைய இந்திய ஊழியர்கள் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் சேவை வழங்கி வரும் மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் நினைத்து கவலை கொள்கிறோம் .

ட்விட்டர் நிறுவனத்தின் உலகளாவிய பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் மூலக் கூறுகளை அமல்படுத்தும் எங்கள் முயற்சிக்கு பதிலடியாக காவல்துறையை பயன்படுத்தி மிரட்டப்படும் உத்திகளால் கவலை கொண்டுள்ளோம்.   

Twitter vs Government Row:இந்தியாவை அவமதிக்கிறது ட்விட்டர்;  மத்திய அரசு காட்டம்!

புதிய விதிமுறைகளில் உள்ள சில பகுதிகள், மக்களின் பங்கேற்புடன் கூடிய திறந்த, வெளிப்படையான, சுதந்திரமான பேச்சுரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. புதிய விதிமுறைகளில் சில மாற்றங்களை முன்வைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

இதற்காக, இந்திய அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான உரையாடலைத் தொடருவோம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள், சிவில் சமூகம், தொழில்நிறுவனங்கள் ஆகியோரின் கூட்டு முயற்சி அடிப்படையிலான அணுகுமுறையே தீர்வுகளை ஏற்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், நாட்டின் சட்டங்களை ட்விட்டர் பின்பற்ற வேண்டும் என்று டிவிட்டரின் அறிக்கைக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. 

Twitter vs Government Row:இந்தியாவை அவமதிக்கிறது ட்விட்டர்;  மத்திய அரசு காட்டம்!

இது தொடர்பாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " ட்விட்டர் நிறுவனத்தின் அறிக்கை, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டுக்கு, தனது விதிமுறைகளை கூறும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. புதிய விதிமுறைகளை வேண்டுமென்றே எதிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் சட்ட அமைப்பை குறைவாக மதிப்பிட முயற்சிக்கிறது.  மேலும், இந்தியாவில் எந்த குற்றத்துக்கும் பொறுப்பேற்பதிலிருந்து பாதுகாப்பை கோருவதன் அடிப்படையில், இடைக்கால வழிகாட்டுதல் ஒழுங்குமுறைகளை பின்பற்ற ட்விட்டர் மறுக்கிறது" என்று தெரிவித்தது. 

மேலும், காவல்துறை விசாரணை தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்த அமைச்சகம், "    நடைபெறும் விசாரணை தொடர்பாக டெல்லி காவல்துறை, ஏற்கனவே விரிவான அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.  ட்விட்டர் நிருவனம் எழுப்பிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு அந்த அறிக்கை பதில் அளிக்கும் விதமாக அமைகிறது. 

டிவிட்டரின் அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது, பொய்யானது. இது தனது முட்டாள்தனத்தை மறைத்து இந்தியாவை அவமதிக்கும் முயற்சி.  இந்த துரதிருஷ்டமான அறிக்கையை இந்திய அரசு கண்டிக்கிறது" என்று  தெரிவித்தது.

Twitter vs Government Row:இந்தியாவை அவமதிக்கிறது ட்விட்டர்;  மத்திய அரசு காட்டம்!

புதிய விதிமுறைகள்:   மத்திய அரசின் புதிய விதிமுறைகளின் கீழ், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தரவுகளை அளிக்குமாறு அரசாங்கம் கோரினால் அவற்றைத் தொடர்புடைய நிறுவனங்கள் உடனடியாக வழங்க வேண்டும். மேலும், அரசாங்கம் சுட்டிக்காட்டுகிற பதிவுகளை 24 மணிநேரத்திற்குள் தொடர்புடைய நிறுவனங்கள் அகற்ற வேண்டும். இவற்றைச் செய்வதற்கு பொறுப்புள்ள அலுவலர்களை நியமிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.      

இதற்கு ஒப்புக்கொள்ளாத சமூக ஊடக நிறுவனங்களை இந்தியாவில் செயல்பட அனுமதிக்க முடியாது நிலை ஏற்படும்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
"தெலுங்கு மக்களே! மன்னிச்சுடுங்க" சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
CJI Chandrachud: தலைமை நீதிபதி வீட்டிற்கு பிரதமர் சென்ற விவகாரம்: சட்ட ரீதியான பாயிண்ட்டை போட்டு ஆஃப் செய்த சந்திரசூட்
தலைமை நீதிபதி வீட்டிற்கு பிரதமர் சென்ற விவகாரம்: சட்ட ரீதியான பாயிண்ட்டை போட்டு ஆஃப் செய்த சந்திரசூட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFESivagangai News |  தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
"தெலுங்கு மக்களே! மன்னிச்சுடுங்க" சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
CJI Chandrachud: தலைமை நீதிபதி வீட்டிற்கு பிரதமர் சென்ற விவகாரம்: சட்ட ரீதியான பாயிண்ட்டை போட்டு ஆஃப் செய்த சந்திரசூட்
தலைமை நீதிபதி வீட்டிற்கு பிரதமர் சென்ற விவகாரம்: சட்ட ரீதியான பாயிண்ட்டை போட்டு ஆஃப் செய்த சந்திரசூட்
"மு.க.ஸ்டாலின் கடின உழைப்பாளி" புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
Ration Shop: வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் -  காரணம் என்ன..?
வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் - காரணம் என்ன..?
WhatsApp: செம அப்டேட்! Whatsapp-இல் வரப்போகும் புதிய Chat ஃபில்டர் வசதி - எப்படி?
WhatsApp: செம அப்டேட்! Whatsapp-இல் வரப்போகும் புதிய Chat ஃபில்டர் வசதி - எப்படி?
"விஜய்யைப் பாத்து சீமானுக்கு பயம் வந்துடுச்சு" காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
Embed widget