மேலும் அறிய

துருக்கி நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கிய 2 மாத குழந்தை...128 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட அதிசயம்...!

துருக்கியின் ஹடாய் என்ற இடத்தில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த இரண்டு மாத குழந்தை ஒன்று நேற்று மீட்கப்பட்டது.

மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6ஆம் தேதி அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தில் சிக்கியதால் பல குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாக மாறியது. அதேபோல, நிலநடுக்கம் ஏற்பட்டு ஏழு நாள்களுக்கு பிறகும் பலர் காப்பாற்றப்பட்ட அதிசயங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

மீட்கப்பட்ட 2 மாத குழந்தை:

அந்த வகையில், துருக்கியின் ஹடாய் என்ற இடத்தில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த இரண்டு மாத குழந்தை ஒன்று நேற்று மீட்கப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு 128 மணி நேரத்திற்கு பிறகு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உறைந்து கிடக்கும் தட்பவெப்பநிலைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

நிலநடுக்கம் ஏற்பட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டவர்களில் இரண்டு வயது சிறுமி, ஆறு மாத கர்ப்பிணி மற்றும் 70 வயதுப் பெண் ஒருவரும் அடங்குவர். இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் துயரத்தில் ஆழ்ந்தியிருந்தாலும், உதவி கிடைத்துவிடுமோ என நம்பிக்கையில் உள்ளனர்.

முதல் இரண்டு நாள்களில் ஏற்பட்ட ஐந்து நிலநடுக்கத்தால் இரண்டு நாடுகள் நிலைகுலைந்துள்ளது. குறிப்பாக, ரிக்டர் அளவில் 7.8, 7.5 என பதிவான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

இதன் விளைவாகவே, தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியா பகுதிகளில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்தன. நிலநடுக்கம் காலை நேரம் ஏற்பட்டதால் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. 

மீட்பு பணியில் இந்தியா:

மீட்கும் பணியில் துருக்கி மற்றும் சிரியாவை சேர்ந்த உள்நாட்டு மீட்பு படையினர் மட்டுமின்றி, இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். 

மோப்ப நாய்களின் உதவியுடனும், இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் சிக்கியுள்ளனரா என தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீடுகளை இழந்து தவித்து வரும் மக்கள், கடும் பனிப்பொழிவால் தங்க இடம் இன்றி தவித்து வருகின்றனர். 

கடந்த 2011ஆம் அண்டு ஜப்பானின் புகுஷிமா நகரில் நிகழ்ந்த அணு உலை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை காட்டிலும் அதிக உயிரிழப்பு, இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ளது. 

தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், ஆபரேஷன் தோஸ்த் மூலம் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தற்காலிக மருத்துவ முகாம்கள், மருந்துகள், மீட்பு படைகள் ஆகியவை அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் துருக்கி நல்லுறவை பேணவில்லை என்றாலும் அந்நாட்டுக்கு சரியான நேரத்தில் உதவிகளை செய்துள்ளது இந்தியா. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs NZ Final: கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?
IND vs NZ Final: கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ Final: கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?
IND vs NZ Final: கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
TVK Party :
TVK Party : "விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது ; கட்சியை அழிக்கும் புஸ்ஸி..." பகீர் கிளப்பும் நிர்வாகி
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
TN Education: கல்லூரி படிக்கும் போதே ரூ.50 ஆயிரம் வாங்கலாம் அரசு ஸ்கீம் இது தான்.. மிஸ் பண்ணாதீங்க !
TN Education: கல்லூரி படிக்கும் போதே ரூ.50 ஆயிரம் வாங்கலாம் அரசு ஸ்கீம் இது தான்.. மிஸ் பண்ணாதீங்க !
Embed widget