30 நிமிடத்தில் 1082 முறை கரலாக்கட்டை சுற்றி உலக சாதனை: த்ரிஷா வெற்றி
புதுச்சேரியில் உலக கரலாக்கட்டை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் மும்பையைச் சேர்ந்த த்ரிஷா என்ற இளம்பெண் 30 நிமிடத்தில் 1082 முறை கரலாக்கட்டை சுற்றி உலக சாதனை நிகழ்த்தினார்!
![30 நிமிடத்தில் 1082 முறை கரலாக்கட்டை சுற்றி உலக சாதனை: த்ரிஷா வெற்றி Trisha from Mumbai set a world record of 1082 times Karalakattai around the beach in 30 minutes in Pondicherry 30 நிமிடத்தில் 1082 முறை கரலாக்கட்டை சுற்றி உலக சாதனை: த்ரிஷா வெற்றி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/13/4616c8ed0bb42ed71513cb4b70f88c42_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புதுச்சேரியில் உலக கரலாக்கட்டை தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மும்பையைச் சேர்ந்த த்ரிஷா என்ற இளம்பெண் 30 நிமிடத்தில் 1082 முறை கரலாக்கட்டை சுற்றி உலக சாதனை நிகழ்த்தினார். புதுச்சேரி பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் ஷக்திரிய குருகுலம் கடந்த 10 வருடமாக மாணவர்களுக்கு போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் சிலம்பம், போர் சிலம்பம், குஸ்தி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, மல்யுத்தம், வர்மக்கலை, தரைப்பாடம், உடற்கட்டு பாடம், ஆகிய பாரம்பரிய கலைகளை பயிற்றுவித்து வருகின்றது.
மாரிதாஸ் கைதை எதிர்ப்பது ஏன்?... விளக்கமளித்த சீமான்!
மேலும் வருடம் தோறும் பாரம்பரிய கலைகளை பாதுகாத்திடும் வகையில் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று பூரனாங் குப்பத்தில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை புதுச்சேரி சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். இதில் மும்பையைச் சேர்ந்த த்ரிஷா என்ற பெண் 2.600 கிலோ எடை கொண்ட கரலா கட்டையை இடுப்பு சுற்று என்ற முறையில் 30 நிமிடத்தில் 1082 முறை சுற்றி உலக சாதனை படைத்தார். இதனைத் தொடர்ந்து ஹரிஹரன் கெண்டைக்கால் சுற்று என்ற முறையில் 30 நிமிடத்தில் 1360 முறை சுற்றி உலக சாதனை படைத்தார்.
இதேபோன்று சிலம்பாட்ட குருகுல நிறுவனர் ஜோதிசெந்தில் கண்ணன், உடும்பு சுற்று என்ற முறையில் சுற்றி உலக சாதனை படைத்தார் இதுபோன்று ஐந்து பேர் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வாழ்த்தினார்.
மேலும் படிக்க...
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)