மேலும் அறிய

Tribal Day: இன்று பழங்குடியினர் தினம்: யார் நினைவால் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

Tribal Day: பழங்குடி சமூகங்களின் பாரம்பரியத்தை கௌரவிப்பதற்காக, 2021 முதல் நவம்பர் 15 அன்று பழங்குடியினர் கெளரவ தினம்  கொண்டாடப்படுகிறது.

பழங்குடி சமூகங்களின் பாரம்பரியத்தை கௌரவிப்பதற்காக, 2021 முதல் நவம்பர் 15 அன்று பழங்குடியினர் கெளரவ தினம்  கொண்டாடப்படுகிறது. இந்த நாளானது நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களால் மதிக்கப்படும் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளாகும்.  பிரிட்டிஷ் காலனித்துவ அமைப்புக்கு எதிராக பிர்சா முண்டா துணிச்சலுடன் போராடி, சுதந்திர இயக்கத்தை வழிநடத்தினார். இந்நிலையில், இவரது பிறந்தநாளன்று, அவரைப்போற்றும் வகையில் பழங்குடியினர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 8.6 சதவிகித மக்கள பழங்குடியினர் உள்ளனர். இந்தியாவில் 10.42 மில்லியன்  பழங்குடியின மக்கள் 705-க்கும் அதிகமான தனித்துவமான குழுக்களாக உள்ளனர். 

இந்த ஆண்டு, பிர்சா முண்டாவின் 150 வது பிறந்த நாளில், பிரதமர் ஒரு சிறப்பு நினைவு நாணயம் மற்றும் தபால் முத்திரையை வெளியிடுகிறார்.அதே நேரத்தில் பழங்குடி சமூகங்களை, குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதற்காக ரூ .6,640 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

இவர்கள் பெரும்பாலும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கின்றனர். இந்த சமூகங்களை மேம்படுத்துவதற்காக, சமூக-பொருளாதார அதிகாரமளித்தல், நிலையான வளர்ச்சி மற்றும் அவர்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், கல்வியை மேம்படுத்துவதற்கும், பழங்குடி மக்களுக்கான உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பழங்கியியின தினத்தையொட்டி, மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது, பழங்குடி சமூகங்களை, குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதற்காக, பழங்குடி சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, 2024-25 மத்திய பட்ஜெட்டில் பழங்குடியினர் நல அமைச்சகத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

Tribal Day: இன்று பழங்குடியினர் தினம்: யார் நினைவால் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

பழங்குடி சமூகங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்க பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்கள் அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும், பிரதான சமூகத்தில் அவர்கள் சேர்க்கப்படுவதை உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.2023, நவம்பர் 15 அன்று, ஜார்க்கண்டின் குந்தியில் தொடங்கிய பிஎம்-ஜன்மான் திட்டம், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் வாழ்விடங்களில் பாதுகாப்பான வீட்டுவசதி, சுத்தமான குடிநீர், கல்வி, சுகாதாரம், சாலை, தொலைத்தொடர்பு இணைப்பு, மின்மயமாக்கல், நிலையான வாழ்வாதாரங்கள் போன்று அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு இயக்கம் பழங்குடி தொழில்முனைவோரை ஊக்குவிப்பதையும்  "பழங்குடியினரின்  உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு " முன்முயற்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறு வன தயாரிப்புகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பழங்குடி சமூகங்கள் சிறப்பாகப் பயன்படுத்த உதவுவதில் இது கவனம் செலுத்துகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget