பூட்டப்பட்ட கழிப்பறையில் சடலத்துடன் 900 கிமீ பயணித்த ரயில்...அதிர்ச்சி சம்பவம்...என்ன நடந்தது?
கிட்டத்தட்ட 900 கிமீ தூரம் பயணம் செய்த ரயிலில் பூட்டப்பட்ட கழிவறைக்கு உள்ளே ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 900 கிமீ தூரம் பயணம் செய்த ரயிலில் பூட்டப்பட்ட கழிவறைக்கு உள்ளே ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை, காவல்துறை உறுதி செய்துள்ளது.
பீகார் மாநிலத்தில் இருந்து புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அந்த நபர் ரயிலில் ஏறி, கதவைப் பூட்டிவிட்டு கழிப்பறைக்கு சென்றுள்ளார். பின்னர், உள்ளேயே அவர் இறந்திருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
கழிவறையில் துர்நாற்றம் வீசுவதாக பயணிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை அன்று பூட்டை உடைத்து கதவை திறந்ததாக ரயில்வே போலீஸ் அதிகாரி ராம் சஹய் தெரிவித்துள்ளார். சஹர்சா-அமிர்தசரஸ் ஜன் சேவா எக்ஸ்பிரஸ் கிட்டத்தட்ட 24 மணிநேரம் பயணித்தது. அதன் முழு பயண நேரம் 35 மணி நேரம் ஆகும்.
அமிர்தசரஸ் பயணத்தை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு அதிகாரிகள் இறந்தவரின் அடையாளத்தை மற்ற பயணிகளுடன் சரிபார்த்தனர். ரயில் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் தாமதமாக வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
A dead body was found inside a train toilet and apparently travelled undetected for 900km across northern India https://t.co/RYLn2exVNG
— Gulf News (@gulf_news) November 3, 2022
இதுகுறித்து சஹய் கூறுகையில், "அவரை பற்றி எங்களுக்கு இன்னும் எதுவும் தெரியாது. அவர் ரயிலில் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது அவர் உள்ளே நுழைந்திருக்கலாம். உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார்" என்றார்.
இதுகுறித்து ரயில்வே மருத்துவமனை மருத்துவர் சஞ்சய் ராய் கூறுகையில், "அந்த நபர் கோமா நிலைக்குச் சென்ற பிறகு அவர் இறந்திருக்கலாம். இதையடுத்து, அந்த நபர் காணாமல் போனதாக விளம்பரம் செய்யப்பட்ட போஸ்டர்களை பீகாரில் உள்ள ரயில் நிலையங்களில் அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்" என்றார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான இறந்த உடல்கள் உரிமை கோரப்படாமலும் அடையாளம் தெரியாமலும் செல்கின்றன. இறந்தவரின் நண்பர்கள் அல்லது உறவினர்களை அடையாளம் காணும் முயற்சியைத் தொடர்ந்து, பொதுவாக மூன்று நாட்களுக்குப் பிறகு காவல்துறையினர் அதை தகனம் செய்கின்றனர்.
#Police say they discovered the dead body of a man that had travelled undetected for 900 kilometers (560 miles) across northern #India locked inside a train toilet.https://t.co/2mzUovhuq7
— Al Arabiya English (@AlArabiya_Eng) November 3, 2022