Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Morning Headlines May 13: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பூஜ் ஏஜெண்டுகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது. மேலும் படிக்க..
- காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
நாகப்பட்டினம் தொகுதி எம்.பி.,யும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினருமான செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாகவே சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1 மணியளவில் உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியைச் சேர்ந்த செல்வராஜூக்கு கடந்த ஜனவரி மாதம் நுரையீரலில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக திருவாரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் படிக்க..
- மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலன் நான்காம் கட்டத்தில், 17 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏற்கனவே மூன்று கட்டமாக நடந்து முடிந்துள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 283 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இன்று 4ம் கட்டமாக 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 17.7 கோடி பேர் இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மேலும் படிக்க..
- ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
இந்திய அரசியலின் எதிர்காலம் ராகுல் காந்திதான் என பாஜக மூத்த தலைவர் எல். கே. அத்வானி புகழ்ந்ததாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. பல பயனர்கள் உள்பட அருணாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. "இந்திய அரசியலின் ஹீரோ ராகுல் காந்தி: லால் கிருஷ்ண அத்வானி (எல்.கே. அத்வானி)" என அந்த பதிவில் எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவுடன் avadhboomi.com என்ற இணையதளத்திற்கான லிங்கும் இணைக்கப்பட்டிருக்கிறது. மேலும் படிக்க..
- கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
கருந்துளையானது எப்படி இருக்கும், அதன் மேலே பறந்து காட்சிப்படுத்துவது போன்ற வீடியோவை உருவாக்கி நாசா வெளியிட்டுள்ளது. விண்வெளி தொடர்பாக அறிவியலாளர்கள் பேசுகையில், பலரும் கருந்துளை குறித்து பேசுவதை பற்றி கேட்டிருப்போம். ஆனால், நமக்கு கருந்துளை எப்படி இருக்கும் என்பது தெரியாது. நாம் கருந்துளையை பார்த்ததில்லை. கருந்துளையை பார்க்கவும் முடியாது. ஏனென்றால் கருந்துளையை காணவும் முடியாது. ஏன் கருந்துளையை பார்க்க முடியாது என்பதால், அது இருள் சூழ்ந்ததாக இருக்கும். மேலும் படிக்க..