Morning Headlines: பாஜக - பாமக கூட்டணி ஒப்பந்தம்.. பிரதமர் சேலம் வருகை.. முக்கியச் செய்திகள்..
Morning Headlines March 19: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- கோவையில் பிரதமர் மோடியை வரவேற்க சிறுவர்களுக்கு ஹனுமான் வேடம் - தேர்தல் விதிகளை மீறிய பாஜக?
கோவையில் பிரதமர் மோடிக்கு சிறுவர்களை கொண்டு வரவேற்பு அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக இந்த முறை தமிழ்நாட்டில் வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என, பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதனை பறைசாற்றும் விதமாகவே நடப்பாண்டில் ஏற்கனவே 5 முறை தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி நேற்று 6வது முறையாக வருகை தந்தார். கோவையில் நடபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக, வாகன பேரணியில் ஈடுபட்டார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த மக்கள், பூக்களை தூவியும், வரவேற்பு பதாகைகளை கைகளில் ஏந்தியும் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் படிக்க..
- பாஜக - பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - 10 தொகுதிகள் ஒதுக்கீடு
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பாஜக மற்றும் பாமக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனம் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸை, இன்று காலை பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது இரு கட்சிகள் இடையே தொகுதிப்பங்கீடு இறுதியானது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் பாஜக சார்பில் அண்ணாமலை, பாமக சார்பில் அன்புமணி கையெழுத்திட்டனர். அதில், பாஜக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
- பத்து ஆண்டுக்கு பின்னர் பிரதமர் சேலம் வருகை... பாஜகவினர் உற்சாகம்..
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சேலம் வருகிறார். சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் சேலம், நாமக்கல் மற்றும் கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது சேலம் இரும்பாலை பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கடந்து கொண்டு பேசினார். அதன் பின்னர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிரதமர் மோடி சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளதால் பாஜகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் படிக்க..
- மீண்டும் அமைச்சராவாரா பொன்முடி? ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
ஆளுநர் ஆர். என். ரவியின் நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரிக்கப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட, 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதையடுத்து, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என ஆளுநருக்கு, முதலமைச்சர் பரிந்துரை செய்தார். ஆனால், தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், குற்றச்சாட்டுகள் இன்னும் தொடர்கின்றன என கூறி, பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் தரப்பு விளக்கமளித்தது. மேலும் படிக்க..