Morning Headlines: சிஏஏ சட்டம் அமல்: மத்திய அரசை எதிர்க்கும் விஜய்; குஷ்புவின் சர்ச்சை பேச்சு: முக்கியச் செய்திகள்..
Morning Headlines March 12: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- உங்க தலைவர்கள் பிச்சை, ஓசின்னு சொல்றப்ப ஊமையா இருந்தீங்களா? - பிச்சைக்கு விளக்கம் கொடுத்த குஷ்பூ
பெண்களை சுதந்திரமாக மாற்றினால் கண்ணியத்துடன் வசதியாக குடும்பம் நடத்தும் அளவுக்கு சேமிப்பார்கள் என நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ தலைமை வகித்தார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்னைக்கு தாய்மார்களுக்கு ரூ.1000 கொடுத்தாலோ, பிச்சை போட்டால் அவர்கள் வாக்கு அளித்து விடுவார்களா?” என கேள்வி எழுப்பியிருந்தார். குஷ்பூவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் படிக்க..
- சிஏஏ சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு - ஒன்று கூடிய தமிழக அரசியல் தலைவர்கள், கடும்எதிர்ப்பு
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டதிற்கு, தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடும் எதிர்ப்புகளுக்கு மத்திய்ல் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டில் அமலுக்கு வந்துள்ளன. இதற்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் சிஏஏ-விற்கு எதிராக தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. மேலும் படிக்க..
- மத்திய அரசுக்கு எதிராக களமிறங்கிய விஜய் - சிஏஏ சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது என கோரிக்கை
சிஏஏ எனப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்புடையதல்ல என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என விஜய் வலியுறுத்தியுள்ளார். மேலும் படிக்க..
- நெருங்கும் தேர்தல்; அமலானது குடியுரிமை திருத்த சட்டம்! என்ன மாற்றங்கள் இனி?
நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்து அரசிதழில் வெளியிட்டது. அயல்நாடுகளிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் இந்திய குடிமகன்களாக கருதப்படமாட்டார்கள். அப்படி குடியேறுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது அகதிகள் முகாமில் சேர்க்கப்படுவர், இதுதான் அன்றைய நிலை. ஆனால் 1955-ஆம் ஆண்டில், 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கிற வெளிநாட்டவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. மேலும் படிக்க..