Morning Headlines: திடீரென சீனா பயணித்த எலான் மஸ்க்.. கோடை வெயிலின் பாதிப்புகளை தடுக்கும் முறைகள்? முக்கியச் செய்திகள்..
Morning Headlines April 29: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- இந்தியாவிற்கு நோ..! திடீரென சீனா பயணித்த எலான் மஸ்க், அப்ப அந்த டெஸ்லா காருக்கான முதலீடு?
சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் ஆட்டோ ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, எலான் மஸ்க் சீனா சென்றுள்ளார். சீனாவில் வளர்ந்து வரும் மின்சார வாகன (EV) சந்தையில் டெஸ்லாவின் தானாக இயங்கும் ஓட்டுநர் தொழில்நுட்பத்தை எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் விரைவில் வெளியிடலாம் என பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில் திடீர் பயணமாக சீனா சென்றுள்ள அந்த நிறுவன தலைவரும், சர்வதேச தொழிலதிபரும் ஆன எலான் மஸ்க், சீனப் பிரதமர் லீ கியாங்கைச் சந்தித்து டெஸ்லா நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து விவாதித்தார். மேலும் படிக்க..
- ”நான் உயிரோடு இருக்கும் வரை”.. ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி
ராகுல் காந்தியின் எண்ணங்களை நான் உயிருடன் இருக்கு வரை செயல்படுத்த விடமாட்டேன் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் இரண்டு கட்டங்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளனர். இதைதொடர்து கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 95 தொகுதிகளில் வரும் மே 7ம் தேதி மூன்றாம்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளஹு. இதை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் கர்நாடகாவின் பெலகாவி, சிர்சி, தாவாங்கேரே மற்றும் ஹோசப்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்ற பாஜக பேரணிகளில் பிரதமர் மோடி அடுத்தடுத்து உரையாற்றினார். மேலும் படிக்க..
- கோடை வெயிலின் பாதிப்புகளை தடுக்கும் முறைகள்? அட்வைஸ் கொடுத்த தமிழக அரசு!
மனித உடலின் சராசரி வெப்ப நிலை 37°C ஆகும் (36.1-37.8°C). சுற்றுப்புற வெப்ப நிலை சராசரி வெப்பநிலையை விட அதிகமாகும் போது உடலில் வியர்வை மற்றும் தோலுக்கு அதிக இரத்த ஓட்டம் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றி மனித உடல் சராசரி வெப்பநிலைக்கு வருகிறது. கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும் பொழுது உடலில் உப்புச் சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மேலும் படிக்க..
- "தாலி கூட அணிவதில்லை; நேரு இருந்திருந்தால்..." - ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சை!
இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கடந்த 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும் நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நிறைவு பெற்றுள்ளது. முதற்கட்ட தேர்தல் நிறைவு பெற்றதில் இருந்தே பாஜக தலைவர்களின் சர்ச்சை கருத்து தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மாநில முதலமைச்சர்கள் என பலரும் சர்ச்சைக்குரிய விதமாக பேசுவது தொடர் கதையாகி வருகிறது. மேலும் படிக்க..