Morning Headlines: உத்தரகாண்ட் வீடியோ கட்சிகள் வெளியீடு.. காங்கிரசுக்கு திமுக ஆதரவு” - இன்றைய முக்கியச் செய்திகள்..
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
மிரட்டல் விடுத்த காலிஸ்தான் தீவிரவாதி பன்னுன்.. ஸ்கெட்ச் போடும் என்ஐஏ..
சிக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தானி ஆதரவாளர்கள், இந்தியாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, சமீப காலமாக காலிஸ்தானி அதரவாளர்கள் செய்யும் செயல் இந்திய அரசை கோபத்தில் ஆழ்த்தியது. அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள இந்திய தூதரகங்களை காலிஸ்தானி ஆதரவாளர்கள் சேதப்படுத்திய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் படிக்க..
10-வது நாளாக மீட்பு பணி: உத்தரகாண்டில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் வீடியோ கட்சிகள் வெளியீடு..
உத்தரகாசியில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் மீட்பு குழுவினர் வாக்கி டாக்கி மூலம் தொடர்புக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி அந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை முழுமையாக மூடிக் கொண்டது. அப்போது, சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 40 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர். மேலும் படிக்க..
“காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு” .. தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் திமுக முடிவு..!
தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது அம்மாநில தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் இடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோராம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க..
விடாது துரத்தும் மதுபான கொள்கை வழக்கு.. சஞ்சய் சிங் மனுவில் EDக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. முதலில், டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக இருந்தவர் மணிஷ் சிசோடியாதான். சிசோடியாவை தொடர்ந்து, அதே வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். மேலும் படிக்க..
5 State Election: அம்மாடியோவ்! 5 மாநில தேர்தலில் ரூ.1,760 கோடி பறிமுதலாம் - தேர்தல் ஆணையம் பகீர்!
அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு செமி பைனலாக கருதப்படும் ஐந்து மாநில தேர்தல் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெறும தேர்தல் என்பதால் இதில் வெற்றி பெறவே அனைத்து அரசியல் கட்சிகளும் முயல்கின்றன. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆளும் தெலங்கானா, மிசோ தேசிய முன்னணி ஆளும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், கடந்த நவம்பர் 7ஆம் தேதி, ஐந்து மாநில தேர்தல் தொடங்கியது. மேலும் படிக்க..