Morning Headlines: தேசிய குழந்தைகள் தினம்.. ரூ.3.75 லட்சம் கோடிக்கு நடந்த தீபாவளி வர்த்தகம்.. முக்கிய செய்திகள் இதோ..!
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே”.. தேசிய குழந்தைகள் தினம் இன்று..!
நாடு முழுவதும் தேசிய குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் தான் இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் குழந்தைகளின் சிறப்பு பண்புகளையும், திறமையையும் நாம் போற்றிட வேண்டும்.தீபாவளி விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் குழந்தைகள் தினத்தை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- தீபாவளி கொண்டாட்டம்.. ரூ.3.75 லட்சம் கோடிக்கு களைகட்டிய வியாபாரம் - முதலிடம் யாருக்கு தெரியுமா?
தீபாவளி பண்டிகையையொட்டி 3.75 லட்சம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நடப்பாண்டு தீபாவளி சீசனில் நேரடி சில்லறை விற்பனை மற்றும் ஆன்லைன் தளங்களில் நடைபெற்ற விற்பனையானது இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் 50 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடைபெற வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
- 9 முறை எம்.பியாக இருந்த தமிழர் - உடல்நலக்குறைவால் காலமானார் வாசுதேவ் ஆச்சார்யா! தொண்டர்கள் சோகம்!
மேற்குவங்கத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 9 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட, தமிழரான வாசுதேவ் ஆச்சார்யா உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- கனமழை எச்சரிக்கை - 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அவசர கடிதம் - வருவாய்த்துறை தீவிரம்
தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய்த்துறை சார்பில் அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர் எஸ். கே. பிரபாகர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த தேவையையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- தினமும் 12 பாட்டில்! கலாபவன் மணி மரணத்திற்கு காரணம் இதுதான்! போலீஸ் தந்த அதிர்ச்சி செய்தி!
நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கான காரணம் குறித்த திடுக்கிடும் தகவல் ஒன்றை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியிட்டுள்ளது சி.பி.ஐ. அதன்படி, “படி கலாபவன் மணி தினமும் 12 முதல் 13 பீர் பாட்டில் குடிக்கும் பழக்கம் இருந்ததே அவரின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. கல்லீரல் செயலிழந்த நிலையிலும், ரத்த வாந்தி எடுத்தபோதும் அளவுக்கு அதிகமாக பீர் குடுக்கும் பழக்கத்தை அவர் கைவிடவில்லை. மரணமடைந்த மார்ச் 6ம் தேதி 12 பீர் பாட்டில் குடித்துள்ளார் என்றும், அதில் மெத்தல் ஆல்கஹால் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க