மேலும் அறிய

Children's Day 2023: ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே”.. தேசிய குழந்தைகள் தினம் இன்று..!

Children's Day 2023: குழந்தைகளுக்கு நிகரான செல்வம் எதுவுமில்லை என்பது போல, அந்த குழந்தைகள் சிறு வயதில் நமக்களிக்கும் மகிழ்ச்சிக்கு ஈடே இல்லை.

நாடு முழுவதும் தேசிய குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் அதுகுறித்த வரலாற்றை வாங்க பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு நிகரான செல்வம் எதுவுமில்லை என்பது போல, அந்த குழந்தைகள் சிறு வயதில் நமக்களிக்கும் மகிழ்ச்சிக்கு ஈடே இல்லை. அப்படியான குழந்தைகள் கொண்டாடும் தினமாக தான் ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் தேதி “தேசிய குழந்தைகள் தினம்” கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் தான் இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 

இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியாவின் எதிர்காலம், நாம் அவர்களை வளர்க்கும் விதம் நாட்டின் தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என நேரு தெரிவித்தார். ஜவஹர்லால் குழந்தைகளை மிகவும் நேசித்தார். அவரை குழந்தைகள் அனைவரும் ‘சாச்சா நேரு’ (மாமா நேரு) என அழைக்கிறார்கள். நேரு குழந்தைகளை இந்த நாட்டின் சொத்தாக நினைத்தார். அவர்களுக்கு தரமான கல்வி கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தவர்.

1956 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் படி  நவம்பர் 20 ஆம் தேதி தான் “உலக குழந்தைகள் தினம்” கொண்டாடப்பட்டது. ஆனால் 1964 ஆம் ஆண்டு பண்டிட் ஜவஹர்லால் நேரு மறைவுக்குப் பின் அப்போதைய அரசு அவரது பிறந்தநாளை நினைவுக்கூறும் வகையில் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று  குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 

இன்றைய நாளில் குழந்தைகளின் சிறப்பு பண்புகளையும், திறமையையும் நாம் போற்றிட வேண்டும். இன்றைய நாளில் பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவதோடு, இனிப்புகள் வழங்கி இன்றைய நாள் சிறப்பிக்கப்படும். பெற்றோர்களும் இந்நாளில் உறுதியொன்றை எடுக்க வேண்டும். அதாவது அவர்கள் தங்கள் குழந்தைகள் மீது விருப்பத்தை திணிக்காமல் அவர்கள் விரும்பும் கல்வியை வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும். 

தமிழ்நாட்டை பொறுத்தவரை தீபாவளி விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் குழந்தைகள் தினத்தை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மற்ற மாநிலங்களில் குழந்தைகள் தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. 

பாடல்களில் குழந்தைகள்

நம்முடைய குழந்தைகளுக்கான பாடல்களில் ஒரு பாடலை நம் அனைவருமே சிறுவயதில் பாடி மகிழ்ந்திருப்போம். அதனை இந்நாளில் நினைவு கூறுவோம். 

அதோ பாரு ரோடு 
ரோட்டு மேல காரு
காருக்குள்ள யாரு
நம்ம மாமா நேரு
நேரு என்ன சொன்னாரு
நல்ல படிக்க சொன்னாரு என்பது அப்பாடலாகும். 

அதேபோல் எம்ஜிஆர் நடித்த நம் நாடு படத்தில் குழந்தைகளை மையப்படுத்தி ஒரு பாடல் இருக்கும்.அதுவும் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

அது,  

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
 என்ற வரிகள் குழந்தைகள் தான் இந்நாட்டின் எதிர்காலம் என்பதை நினைவூட்டும் வகையில் அமைந்திருக்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய  சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
sunita williams Return: நான் வந்துட்டேன்..! பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், முதல் வீடியோ - இணையத்தில் வைரல்
sunita williams Return: நான் வந்துட்டேன்..! பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், முதல் வீடியோ - இணையத்தில் வைரல்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMDK Alliance DMK | Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய  சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
sunita williams Return: நான் வந்துட்டேன்..! பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், முதல் வீடியோ - இணையத்தில் வைரல்
sunita williams Return: நான் வந்துட்டேன்..! பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், முதல் வீடியோ - இணையத்தில் வைரல்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
IPL 2025 Coach:
IPL 2025 Coach: "பாண்டிங் முதல் பதானி வரை" 10 அணிக்கும் பயிற்சியாளர்கள் யார்? யார்?
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
Embed widget