Morning Headlines: பிரமிக்க வைக்கும் நாட்டின் முதல் புல்லட் ரயில் நிலையம்.. எதிர்பார்ப்பை கிளப்பிய ஜம்மு காஷ்மீர் வழக்கு.. முக்கியச் செய்திகள்..
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- பாலியல் உணர்வுகளை அடக்கணும்.. பெண்கள் குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்தை சாடிய உச்சநீதிமன்றம்..
சமீப காலமாக, நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபர் மாதம் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இளம் பெண்கள், பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்தார். சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரை விடுதலை செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்தது. மேலும் படிக்க..
- அடங்கப்பா! பிரமிக்க வைக்கும் நாட்டின் முதல் புல்லட் ரயில் நிலையம்...வீடியோ வெளியிட்ட ரயில்வே அமைச்சர்!
ரயில் சேவையை நவீனப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத்தை காட்டிலும் அதிவேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயிலானது பயணிகளின் பயண நேரத்தை மேலும் குறைக்கும். எனவே, புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், அதிக வேக ரயில்களை கொண்டு வருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் படிக்க..
- எதிர்பார்ப்பை கிளப்பிய ஜம்மு காஷ்மீர் வழக்கு.. உச்சநீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு என்ன?
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இதன் மீதான விசாரணை, கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கி 16 நாள்கள் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கும் மனுதாரர் தரப்புக்கும் இடையே பரபர வாதம் நடைபெற்றது. மேலும் படிக்க..
- நெருக்கடி கொடுக்கும் ரேவந்த்! வழுக்கி விழுந்த கேசிஆர் மருத்துவமனையில் அனுமதி!
தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தனது எர்ரவெல்லி பண்ணை வீட்டில் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் தெலங்கானாவின் ஆட்சி கட்டிலில் காங்கிரஸ் முதல் முறையாக அமர்ந்தது. இரண்டு முறை தெலங்கானாவின் முதலமைச்சராக இருந்த சந்திரசேகர் ராவ் சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி தெலங்கானாவில் 2வது முதலமைச்சராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் படிக்க..
- மிசோரம் மாநில முதலமைச்சராக லால்துஹோமா பதவியேற்பு.. சவால்களை சமாளிப்பாரா?
மிசோரம் மாநில முதலமைச்சராக ஜோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்துஹோமா பதவியேற்றுள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து மிசோரம் மாநிலம் உருவாக்கப்பட்டது. யூனியன் பிரதேசமாக இருந்த மிசோரமுக்கு கடந்த 1987ஆம் ஆண்டு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. அப்போதில் இருந்து, காங்கிரஸ் கட்சியும் மிசோ தேசிய முன்னணியும்தான் அம்மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. மேலும் படிக்க..