National Headlines: படத்துக்கு தடைவிதித்த மம்தா பானர்ஜி.. கர்நாடகாவில் நாளை தேர்தல்..இந்தியாவின் முக்கிய நிகழ்வுகள் இதோ..!
ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
- மக்கள் ஆதரவு யாருக்கு? கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை தொடக்கம்..
நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வத்ரே உள்ளிட்டோர் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் படிக்க
- மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு விவசாயிகள் ஆதரவு.. தடுப்புகளை உடைத்தெறிந்த விவசாயிகள்...
டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக போலீசாரின் தடுப்பான்களை உடைத்தெறிந்து விட்டு விவசாயிகள் முன்னேறி உள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் 2 வார காலமாக நீடித்து வருகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கிய நிலையில், 3 மாதங்களுக்கு பின்னர், மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியில் இருந்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் படிக்க
- 'தி கேரளா ஸ்டோரி' படத்தை வெளியிட தடை.. மேற்கு வங்க முதல்வர் மம்தா அதிரடி...!
தி கேரள ஸ்டோரி திரைப்படத்தை வெளியிடத் தடை விதித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ”வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்ளை தவிர்த்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் ஒரு தரப்பினரை இழிவுப்படுத்தியது. தற்போது ’தி கேரளா ஸ்டோரி' திரிக்கப்பட்ட கதையாக வெளியாகி இருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்கும் பாஜக தான் நிதியுதவி செய்துள்ளது” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- தமிழ்நாடு அமைதியான மாநிலம்; குழப்பத்தை ஏற்படுத்தினால் கேட்டுக்கொண்டிருக்க முடியாது - உச்சநீதிமன்றம்
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரியும் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை, இந்தியாவின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பார்திவாலா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. மேலும் படிக்க
- தமிழ்நாட்டில் 50 ஆயிரம் சட்டவிரோத மொபைல் இணைப்புகள்..! நவீன தொழில்நுட்ப உதவியால் அம்பலம்..!
இந்தியாவில் கொரோனா பொது முடக்கக் காலமான 2020ஆம் ஆண்டு அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில், 11,097 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் 385 சம்பவங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டன. மேலும் படிக்க