National Headlines: சுடச்சுட..! இன்றைய தேசிய தலைப்புச்செய்திகள் - இதுவரை நாட்டில் நடந்தது என்ன?
ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
-
மல்யுத்த வீரர்களை சமாதானப்படுத்திய விவசாயிகள்..! 5 நாட்கள் மட்டுமே மத்திய அரசுக்கு அவகாசம்..!
மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை கங்கையில் வீசுவதை வட மாநில விவசாய சங்கத்திபர் தடுத்து நிறுத்தினர். ஹரித்துவாரில் கங்கை நதியில் பதக்கங்களை வீசச் சென்ற மல்யுத்த வீரர்களை சமாதானம் செய்தனர் விவசாயிகள். விவசாய சங்க தலைவர் நரேஷ் திகைத் தலைமையில் நிர்வாகிகள் பலர் வீரர்களை சமாதானப்படுத்த ஹரித்துவார் வந்துள்ளனர். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/wrestlers-protest-farmer-leader-naresh-tikait-convince-players-to-not-to-throw-medals-in-ganga-in-haridwar-120421
- Wrestlers Protest: 'பிரிஜ்பூஷண்சிங்கை கைது செய்யாவிட்டால் பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம்' - மல்யுத்த வீராங்கனைகள் எச்சரிக்கை
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கிய நிலையில், 3 மாதங்களுக்கு பின்னர், மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியில் இருந்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மல்யுத்த வீரர்கள் வாங்கிய பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/wrestlers-mention-that-they-will-throw-medal-in-river-ganga-if-no-action-takes-against-brij-bhushan-sharan-singh-120347
- Manish Sisodia Bail Plea: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி - நீதிமன்றம்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அந்த மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ்சிசோடியா கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது முதல் அந்த வழக்கு பரப்பாகவே காணப்படுகிறது. இந்த நிலையில், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/the-delhi-high-court-rejected-the-bail-plea-of-former-delhi-deputy-chief-minister-manish-sisodia-120325
- Bus Accident: பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - 75 பேர் காயம்.. எப்படி நடந்தது இந்த சோகம்?
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து ஏராளமான பயணிகளுடன் பேருந்து ஒன்று கத்ராவில் உள்ள கோவில் நோக்கி சென்றுகொண்டு இருந்தது. இந்த பேருந்து ஜம்மு மாவட்டம் கத்ராவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜஜ்ஜார் கோட்லி அருகே சென்று கொண்டு இருந்தபோது மலையில் இருந்து ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மலை உச்சியிலிருந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 55 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/bus-accident-10-killed-50-injured-as-bus-falls-off-bridge-in-jammu-120319
- Delhi Crime : "வருத்தம்லா இல்ல... அவ என்ன வேணாம்னு சொன்னா" டெல்லி சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!
தலைநகர் டெல்லியில் ஷஹபாத் டெய்ரி என்ற பகுதியில் மிகவும் கொடூரமான ஒரு படுகொலை சம்பம் நடந்துள்ளது. 16 வயது சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நேற்று கைது செய்யப்பட்ட இளைஞர் சாஹிலிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் 16 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் கைதான சாஹிலை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/delhi-teen-killer-boyfriend-says-no-regrets-she-ignored-me-sources-shocking-incident-120310