Morning Headlines July 28: அண்ணாமலை தொடங்கும் நடைபயணம்.. பாஜகவை சாடிய ராகுல்காந்தி.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்..!
Morning Headlines July 28: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலைச் செய்திகளில் காணலாம்.
- இப்ப மணிப்பூர், அடுத்து ஹரியானா, பஞ்சாப், உ.பி-ய பாஜக விற்கும்” - ராகுல் காந்தி சாடல்
இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாட்டை பிளவுபடுத்துவது தான் பாஜக- ஆர்எஸ்எஸ்-ன் நோக்கம் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.நாட்டின் துயரம் மற்றும் வலியைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அது ஹரியானா, பஞ்சாப் அல்லது உத்தரபிரதேசமாக இருந்தாலும், அவர்கள் அதிகாரத்தை மட்டுமே விரும்புவதால் அவர்கள் முழு நாட்டையும் விற்றுவிடுவார்கள் என விமர்சித்துள்ளார். மேலும் படிக்க
- நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை.. அமித்ஷா ப்ளான் என்ன? இதோ முழு விவரம்..
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘ என் மண் என் மக்கள் - மோடியின் தமிழ் முழக்கம் ‘ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரத்தில் இன்று தொங்கி வைக்கிறார். இந்த நடைப்பயணம் 168 நாட்கள் நடைபெறும் எனவும், இதில் 1700 கிமீ தூரம் பயணம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 168 நாட்கள் நடைபெறும் பாத யாத்திரையில் 10 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் படிக்க
- பிளஸ் 1 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; பார்ப்பது எப்படி?
பிளஸ் 1 துணைத் தேர்வு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாக உள்ளன. இன்றே மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்தல் மற்றும் விடைத்தாள் நகல் ,மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வர்கள் https://dge.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, மதிப்பெண் பட்டியலாக (Statement of Marks) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- மகளிர் உரிமைத் தொகை; ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் விண்ணப்பங்கள் விநியோகம்
தமிழ்நாடு அரசு வழங்கவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளும் பணிகளை கடந்த 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதில் இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கும் பணி துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் தேது துவங்கும் இந்த விண்ணப்ப விநியோகம் 4ஆம் தேதிவரை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் உடன் இணைந்து போட்டி - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
2024 மக்களவைப் பொதுத் தேர்தலை ஓபிஎஸ் உடன் இணைந்து அமமுக எதிர்கொள்ளும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அமமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் படிக்க