மேலும் அறிய

11th Supplementary Result: பிளஸ் 1 துணைத்‌ தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு; பார்ப்பது எப்படி?

TN 11th Supplementary Result 2023: பிளஸ் 1 துணைத்‌ தேர்வு தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியாக உள்ளன.

பிளஸ் 1 துணைத்‌ தேர்வு தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியாக உள்ளன. நாளையே மதிப்பெண்‌ பட்டியலாக பதிவிறக்கம்‌ செய்தல்‌ மற்றும்‌ விடைத்தாள்‌ நகல்‌ ,மறுகூட்டல்‌ -1க்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதிப்பெண்‌ பட்டியல்‌ பதிவிறக்கம்‌ செய்தல்‌:

ஜூன்‌, ஜூலை 2023, மேல்நிலை முதலாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்வெழுதிய தேர்வர்கள்‌, தங்கள்‌ தேர்வு முடிவினை 28.07.2023 (வெள்ளிக்கிழமை) பிற்பகல்‌ முதல்‌ தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். தேர்வர்கள் https://dge.tn.gov.in/ என்ற இணையதளம்‌ வாயிலாக தங்களது தேர்வெண்‌ மற்றும்‌ பிறந்த
தேதி ஆகியவற்றை பதிவு செய்து, மதிப்பெண்‌ பட்டியலாக (Statement of Marks) பதிவிறக்கம்‌ செய்துக்‌ கொள்ளலாம்‌.

மேற்படி இணையதள முகவரிக்குள்‌ சென்று Notification பகுதியில்‌ “HR SEC FIRST YEAR JUNE/JULY 2023 - PROVISIONAL CERTIFICATE DOWNLOAD” என்ற வாசகத்தினை க்ளிக்ல் செய்தால்‌, தோன்றும்‌ பக்கத்தில்‌ தேர்வர்கள்‌ தங்களது தேர்வெண் (Roll No) மற்றும்‌ பிறந்த தேதி  (Date of Birth) ஆகியவற்றை பதிவு செய்து, தங்களது மதிப்பெண்‌ பட்டியலினை (Statement of Marks) பதிவிறக்கம்‌ செய்துக்‌ கொள்ளலாம்‌.

விடைத்தாள்‌ நகல்‌ மற்றும்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்‌ முறை:

ஜூன்‌, ஜூலை 2023, மேல்நிலை முதலாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்வுக்கான விடைத்தாள்‌ நகல்‌ , மறுகூட்டல்‌-1 கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ தேர்வர்கள்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்திற்கு 01.08.2023 (செவ்வாய்க்‌ கிழமை) மற்றும்‌ 02 .08.2023 (புதன்‌ கிழமை) ஆகிய நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.45 மணி வரை நேரில்‌ சென்று உரிய கட்டணம்‌ செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்‌.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில்‌ (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்‌, இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு) முதன்மைக்கல்வி அலுவலர்‌ அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள்‌ பதிவு செய்துகொள்ளலாம்‌.

விடைத்தாள்‌ நகல்‌, மறுகூட்டல்‌ - 1 ஆகியவற்றில்‌ எதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள்‌ விண்ணப்பிக்க இயலும்‌. தேர்வர்கள்‌ தங்களது விடைத்தாளின்‌ நகல்‌ வேண்டுமா? அல்லது மதிப்பெண்‌ மறுகூட்டல்‌ செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன்‌ பின்னர்‌ விண்ணப்பிக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. 

விடைத்தாள்‌ நகல்‌ பெற்றவர்கள்‌ மட்டுமே விடைத்தாள்‌ மறுமதிப்பீடு கோரி பின்னர்‌ விண்ணப்பிக்க இயலும்‌.

மதிப்பெண்‌ மறுகூட்டல்‌ கோரி விண்ணப்பிக்கும்‌ பாடத்திற்கு விடைத்தாட்களின்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்திட இயலாது. விடைத்தாளின்‌ நகல்‌ பெற்ற பிறகு அவர்கள்‌ மறுகூட்டல்‌ .11/ மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்‌.

விடைத்தாளின்‌ நகல்‌ (Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம்‌ :
ஒவ்வொரு பாடத்திற்கும்‌ ரூ.275/-

மறுகூட்டல்‌ (Re-totalling-I) கட்டணம்‌
உயிரியல்‌ பாடத்திற்கு மட்டும்‌ - ரூ.305/-
எனையப்‌ பாடங்கள்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ.205/-

பணம்‌ செலுத்தும்‌ முறை :

தேர்வர்கள்‌ விடைத்தாள்‌ நகல்‌ / மறுகூட்டல் 1-க்கான கட்டணத்தை விண்ணப்பிக்க உள்ள சம்மந்தப்பட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகம்‌ மற்றும்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலகத்தில்‌ பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.

விடைத்தாள்‌ நகல்‌- இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளும்‌ முறை :

விடைத்தாள்‌ நகல்‌ விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும்‌ ஒப்புகைச்‌ சீட்டினை மாணவர்கள்‌ பாதுகாப்பாக வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. தேர்வெண்‌் மற்றும்‌ பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பயன்படுத்தி தேர்வர்கள்‌ தங்களது விடைத் தாளின்‌ நகலினை இணையதளம்‌ வழியாக பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

விடைத்தாளின்‌ நகலினை இணையதளம்‌ வழியாக பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டிய நாள்‌ மற்றும்‌ இணையதள முகவரி பின்னர்‌ ஊடகங்கள்‌ வாயிலாகவும்‌, www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும்‌ வெளியிடப்படும்‌.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
Anbumani: கூட்டணி என்றால் வாயை மூட வேண்டுமா ? திருமாவளவனுக்கு அன்புமணி சரமாரி கேள்வி..
Anbumani: கூட்டணி என்றால் வாயை மூட வேண்டுமா ? திருமாவளவனுக்கு அன்புமணி சரமாரி கேள்வி..
Rule Change Jan 1st 2025: ஜிஎஸ்டி, மொபைல் டேட்டா, விசா..! இனி எல்லாமே புதுசு - ஜன.1, 2025 முதல் இத்தனை புதிய விதிகளா?
Rule Change Jan 1st 2025: ஜிஎஸ்டி, மொபைல் டேட்டா, விசா..! இனி எல்லாமே புதுசு - ஜன.1, 2025 முதல் இத்தனை புதிய விதிகளா?
புகைப்படக்காரர்களுக்கு ஃபிளையிங் கிஸ்... செலிபிரிட்டி போல் நடந்துகொள்ளும் ஆலியா பட் மகள்...
புகைப்படக்காரர்களுக்கு ஃபிளையிங் கிஸ்... செலிபிரிட்டி போல் நடந்துகொள்ளும் ஆலியா பட் மகள்...
Anna University Issue: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்
Anna University Issue: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்
Embed widget