National Headlines: மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கு தடை... வெள்ளத்திற்கு மத்தியில் சிக்கிக்கொண்ட கார்... இன்றைய தேசிய தலைப்பு செய்திகள்!
ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
- Manipur Violence: டெல்லியில் முக்கிய மீட்டிங்..பேச்சுவார்த்தையில் பங்கேற்ற முதலமைச்சர்..மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வா?
மணிப்பூரில் நிலவி வரும் சூழல் குறித்து விளக்கம் அளிக்க, டெல்லிக்கு சென்ற அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங், அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார். மாநில மற்றும் மத்திய அரசுகளால் வன்முறையை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடிந்தது என பைரன் சிங் அமித் ஷாவிடம் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தது குறித்து நேற்று ட்விட்டரில் பதிவிட்ட பைரன் சிங், "டெல்லியில் அமித்ஷா ஜியை சந்தித்து, மணிப்பூரில் நிலவும் சூழ்நிலை குறித்து விளக்கினேன். அமித் ஷாவின் தீவிர கண்காணிப்பின் கீழ், மாநில மற்றும் மத்திய அரசு கடந்த வாரத்தில் வன்முறையை பெருமளவு கட்டுப்படுத்த முடிந்தது" என பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
- ராணுவத்தை சுற்றி வளைத்த பெண்கள் அடங்கிய கும்பல்.. சிக்கி கொண்ட அப்பாவி மக்கள்.. நடந்தது என்ன..?
மணிப்பூரில் தொடர்ந்து வரும் வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நடந்து முடிந்து அனைத்து கட்சி கூட்டத்தில், மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக தகவல் வெளியானது. மணிப்பூர் பிரச்னை நாளுக்கு நாள் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் படிக்க
- வெள்ளத்திற்கு மத்தியில் சிக்கி கொண்ட கார்... உள்ளே உயிருக்கு போராடும் பெண்... துணிச்சலாக செயல்பட்ட உள்ளூர்வாசிகள்..!
ஹரியானா மாநிலம் பஞ்சகுலா நகரில் அசாதாரண சூழலுக்கு மத்தியில் சிக்கி கொண்ட பெண்ணை உள்ளூர் மக்கள் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ககர் நதியின் நீர் அளவு திடீரென அதிகரித்தது. இதனால், பஞ்சகுலா நகரின் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
அப்போது, அருகிலுள்ள கோயிலுக்கு காரில் சென்ற பெண், கோயிலில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். தனது காரில் அமர்ந்திருந்தபோது, திடீரென நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து, கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் படிக்க
- Wrestlers election: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கு தடை...குவஹாத்தி உயர் நீதிமன்றம் உத்தரவு..!
அசாம் மல்யுத்த சங்கம் தொடர்ந்த வழக்கில் குவஹாத்தி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு எதிராக அசாம் மல்யுத்த சங்கம் மனு ஒன்றை தாக்கல் செய்ததது. அதில், "இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பாக இருப்பததற்கு தகுதி இருந்த போதிலும், அதற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை.
கடந்த 2014ஆம் ஆண்டு, நவம்பர் 15ஆம் தேதி, கோண்டாவில் நடந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில், அசாம் மல்யுத்த சங்கத்தை உறுப்பு அமைப்பாக அறிவிக்க அப்போதைய நிர்வாக குழு பரிந்துரை வழங்கியது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டது. மேலும் படிக்க