National Headlines: மோடிதான் 'பாஸ்'.. கர்நாடகாவில் ஒரே முதலமைச்சரா? இந்தியாவின் முக்கிய நிகழ்வுகள் இதோ..
ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
- PM Modi Australia Visit: 'மோடி தான் பாஸ்...' சிட்னியில் வேதமந்திரங்கள் முழங்க வரவேற்பு.. புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய பிரதமர்..!
இந்தியப் பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், சிட்னியில் உள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்று பிரதமர் மோடிக்கு உற்சாக வர்வேற்பளித்து வருகின்றனர். மேலும் படிக்க
- Karnataka: 'கர்நாடகாவில் சித்தராமையா மட்டும் தான் முதலமைச்சரா?’ கொந்தளித்த டி.கே.சிவக்குமார்..! என்ன நடந்தது?
கர்நாடகாவில் 5 ஆண்டுகளும் முதலமைச்சராக சித்தராமையா தொடர்வார் என மாநில அமைச்சர் ஒருவர் சொன்ன கருத்துக்கு துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காட்டமாக பதிலளித்துள்ளார். கடந்த மே 10 ஆம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது.மேலும் படிக்க
- Cough medicine Export: இருமல் மருந்து ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடு... முழு விவரம்..
இருமல் மருந்து ஏற்றுமதியாளர்கள் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஏற்றுமதிக்கான அனுமதியைப் பெறுவதற்கு முன் குறிப்பிட்ட அரசு ஆய்வகங்களில் தங்கள் தயாரிப்புகளை சோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- Quintuplets: ராஞ்சி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்..! மருத்துவர்கள் ஆச்சரியம்..!
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பமாகி 7 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகள் பிறந்தன. இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் படிக்க
- Prostitution: பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது மட்டுமே குற்றம் - மும்பை நீதிமன்றம்
மும்பையில் பாலியல் வழக்கில் பெண் ஒருவரை ஒரு வருடத்திற்கு பராமரிப்பு இல்லத்தில் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக அப்பெண் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த 34 வயது பெண்ணை விடுதலை செய்து உத்தரவிட்டது. பொது இடத்தில் ஒருவர் மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது மட்டுமே சட்டப்படி குற்றம் என்று நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் படிக்க
- UPSC 2022 Topper: யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம்: யார் இந்த இஷிதா கிஷோர்?
யூபிஎஸ்சி சார்பில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கு நடத்தப்பட்ட 2022ஆம் ஆண்டு தேர்வுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 4 இடங்களைப் பெண்களே பிடித்துள்ளனர். யூபிஎஸ்சி தேர்வில் இஷிதா கிஷோர் என்னும் தேர்வர் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் படிக்க